தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றம்!

அரசியல் சாசனத்தில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை தொடர்ந்தும் அவ்வாறே பேணுவதோடு, ஒற்றையாட்சியும் பாதுகாக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீ்ண்டும் உத்தரவாதம் வழங்கியிருக்கின்றார்.

சிங்கள பௌத்த மக்களின் அதி உயர் மத பீடங்களான கண்டி அஸ்கிரி மற்றும் மல்வது பீடங்களின் மகாநாயக்கத் தேரர்களை நேரில் சந்தித்து இந்த உத்தரவாதங்களை தெரியப்படுத்தியுள்ள சிறிலங்கா பிரதமர், இவற்றுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் முழுமையான இணக்கத்தை தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

சிறிலங்காவின் பிரதமராக ஐந்தாவது தடவையாகவும் டிசெம்பர் 16 ஆம் திகதி பதவியேற்றுக்கொண்ட ரணில் விக்கிரமசிங்க, டிசெம்பர் 28 ஆம் திகதியான இன்றைய தினம் சிங்கள பௌத்த மக்களின் புனிதத் தளமான கண்டி சிறி தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதனையடுத்து சிங்கள பௌத்த மக்களின் மதத் தலைமை பீடங்களில் ஒன்றான நியம் பீடத்தின் அஸ்கிரி பிரிவிற்கு சென்ற சிறிலங்கா பிரதமர், வரக்காகொட சிறி ஞானரத்ன மகாநாயக்கரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

பிரதமர் ரணிலுடன் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களும் உடன் சென்றிருந்தனர்.இதனையடுத்து மல்வது பீட மகாநாயக்க தேரர் திப்படுவாவே சிறி சுமங்கல தேரரை சந்தித்த சிறிலங்கா பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் மூத்த அமைச்சர்கள் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர்.

இந்த சந்திப்புக்களின் இறுதியில், இன்றைய தினம் மகாநாயக்கத் தேரர்களை அவசரமாக சந்தித்ததற்கான காரணத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெளிவுபடுத்தினார்.

தலதா மாளிகைக்கு சென்று தலதா பெருமானை வணங்கி ஆசீரிவாதம்பெற்றுக்கொண்ட நிலையில் அஸ்கிரி, மல்லவது பீடங்களின் மகாநாயக்கத் தேரர்களையும் சந்தித்திருந்தேன். நாட்டின் அரசியல் சாசனத்தையும், மக்களின் இறையாண்மையையும் பாதுகாப்பதற்காக மகாநாயக்கத் தேரர்கள் வழங்கிய ஒத்துழைப்பிற்காக நன்றியும் தெரிவித்துக்கொண்டேன்.

நிலையான அரசாங்கமொன்றை கட்டியெழப்புவதற்கு அரச கட்டமைப்புக்களை வலுப்படுத்த வேண்டியது அவசியம். அதற்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டியது அவசியம். அதேபோல் எமது செயற்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்வோம் என்பதையும் மகாநாயக்கத் தேரர்கள் இருவருக்கும் தெரியப்படுத்தினேன். கிராமங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்து அபிவிருத்தியின் பயனை பெற்றுக்கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகயும் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.

ஒக்டோபர் 26 ஆம் திகதி இடம்பெற்ற ஆட்சிக்க விழ்ப்பை அடுத்து முடங்கிப்போயுள்ள புதிய அரசியல் சாசனத்தை தயாரிக்கும் பணிகள் மீண்டும் முன்னெடுக்கப்படும் என்பதையும் உறுதிப்படுத்திய சிறிலங்கா பிரதமர் ரணில், இதன்போது பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையும், ஒற்றையாட்சி முறைமையும் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த விடையங்களில் தனது இந்த உறுதியான நிலைப்பாட்டை மகாநாயக்கத் தேரர்கள் இருவருக்கும் மிகத் தெளிவாக எடுத்துரைத்ததாகவும் ரணில் கூறியதுடன், இதற்கு தமிழ் தேசியக் கூடடமைப்பு உள்ளிட்ட அனைத:து எதிர்கட்சிகளும் ஏற்கனவே முழுமையான இணக்கப்பாட்டை தெரியப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.

அரசியல் சானத்தை மறுசீரமைக்கும் போதும், அதேவேளை புதிய திருத்தங்களை மேற்கொள்ளும் போதும் தற்போது நடைமுறையிலுள்ள எமது அரசியல் சாசனத்தின் ஒன்பதாவது பிரிவான பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள சரத்தில் ஒரு எழுத்தையேனும் மாற்றுவதில்லை என்று நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுடனும் நாம் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றோம். அதேபோல் நாம் ஒற்றையாட்சியை பாதுகாப்போம். ஒற்றையாட்சி முறைமையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வோம். இந்த இரண்டு விடையங்களையும் மகாநாயக்கத் தேரர்களுக்கு அறிவித்தேன்”.

சில நாட்களுக்கு முன்னர் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டிருக்கின்றன. இந்த நடவடிக்கைக்கு எதிராக கடு் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிசாருக்கும் அறிவுறுத்தினோம். இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய கடும்போக்காளர்கள் பலர் கைதுசெய்யப்பட்டும் உள்ளனர். இதனிடையே இந்து கோவிலொன்றின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக முழமையான சடட நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளோம். இதன்போது எந்தவொரு சலுகையும் வழங்கக் கூடாது என்றும் பொலிசாரை அறிவுறுத்தியுள்ளோம். அதேவேளை சேதமாக்கப்பட்ட கோவிலுக்கும், புத்தர் சிலைகளையும் புனரமைப்பதற்காக அரசாங்கம் நிதி உதவி வழங்கும்”.

இந்த சந்திப்புக்களின் இறுதியில் கண்டி மல்வது மகா விகாரையில் நடைபெற்ற விசேட வழிபாடுகளிலும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
Read More

100 கோடி கேட்ட ரஜனி ?

ஷங்கர் இயக்கத்தில், ஏவிஎம் தயாரிப்பில் “சிவாஜி” படத்தில் நடித்த ரஜினி, அந்த படத்தில் வசூலை கணக்கில் வைத்து தனக்கான சம்பளத்தை கேட்டு வாங்கி வந்தார். படத்தயாரிப்பில் நஷ்டமானதால் வேறு வழியே இல்லாமல், தாணு தயாரிப்பில் ஒரு படம் நடித்தார். ரஜினி அவரது திரையுலக வாழ்க்கையில் வாங்காத தொகையை கபாலி படத்திற்கு சுமார் 50 கோடியை வாங்கினார் என்பது பலருக்கு தெரியாது. விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தாலும் “கபாலி” வசூலில் சக்கைப்போடு போட்டது. ஆனாலும், தாணு போட்ட காசுக்கு வட்டி கூட தேறல என கையை பிசைந்து நின்றார். காரணம் இவர் ரஜனிக்கு கொடுத்த சம்பளம் தான் !

கபாலி வசூலை, மனதில் வைத்து வெறும் 25 நாட்கள் மட்டுமே நடித்த 2.0 படத்திற்கு 65 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கினார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பொங்கலுக்கு வர இருக்கும் “பேட்ட “படத்திற்கு அதே சம்பளத்தை வாங்கியுள்ளார். பேட்டயை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக கூறப்பட்டு வந்தது. சர்கார் கதையை திருடிய பஞ்சாயத்தால், முருகதாஸ் இயக்கும் ரஜினி படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க விரும்பவில்லை என்று தகவல் கசிந்தது. அப்படத்தை 2.0 படத்தை தயாரித்த லைகா தயாரிக்க விரும்புவதாக கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது அந்நிறுவனமும் தயாரிக்கவில்லை என்கின்றனர்.

அப்படியென்றால் ரஜினி – முருகதாஸ் கூட்டணியில் தயாராகவுள்ள படத்தை தயாரிக்க போவது யார் என்பதை ரஜினிதான் முடிவு செய்ய வேண்டும் எனக் கூறுகின்றனர். காரணம் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ரஜினி எதிர்பார்க்கும் சம்பளம் 100 கோடி ரூபாய். சன் பிக்சர்ஸ், லைகா என இரு பெரும் நிறுவனங்களும் ரஜினி நடிக்கும் படத்தை தயாரிக்க விரும்பாததற்கு அவர் கேட்கும் 100 கோடி ரூபாய் சம்பளம் தான் காரணம் என்கின்றனர். ரஜினி கேட்கும் சம்பளம் அவரது படங்களுக்கு உள்ள வியாபாரம் மற்றும், வசூல் கணக்குகளுக்கு எதிரானது. தமிழகத்தில் விஐய் படங்களைக் காட்டிலும் குறைவாகவே ரஜினி நடிக்கும் படங்களுக்கு வசூல் இருப்பதை ரஜினி நடிப்பில் வெளியான ,கபாலி, காலா, 2.0 பட வசூலை விவரம் அம்பலமாகியது.

இந்த நிலையில் அவருக்கு மட்டும் சம்பளம் 100 கோடி, பிற நடிகர்கள் சம்பளம் தயாரிப்பு செலவு என 200 கோடி என கொடுத்துவிட்டு எந்தப் பணத்தில் படத்தை எடுப்பது? சரி மொத்தமாக 300 கோடி போட்டு எடுத்தாலும் , படத்தை ரிலீஸ் பண்ணி அசலை எடுப்பதற்க்கே நாக்கு தள்ளும். அப்புறம் லாபம் எங்கிருந்து வரும்?! இப்போதைக்கு படத்தை தயாரிக்க எந்த நிறுவனமும் தயாராக இல்லை என்பதால், தயாரிப்பாளரை தேடும் வேலையை முருகதாஸிடம் ஒப்படைத்துவிட்டு, அமெரிக்காவுக்கு ஓய்வெடுக்கப் போகிறாராம் ரஜினி.
Read More

சுனாமியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரிப்பு

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ச்சியாக மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகின்றது.

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் 43 பேர் உயிரிழந்துள்ளதுடன், 584 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் முகமைத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றிரவு (சனிக்கிழமை) 9.30 மணியளவில் தாக்கிய இந்த சுனாமியினால், பெருமளவு மக்கள் காணாமற்போயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், குடியிருப்புகள், கட்டடங்கள் மற்றும் வீதிகள் சேதமடைந்துள்ளதோடு, பெருமளவு சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதோடு, காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் செயற்பாடுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்தோனேஷியாவின் வளிமண்டலவியல் மற்றும் காலநிலை ஆய்வு மையத்தின் தகவலுக்கு அமைய, சுனாமி பேரலைகள் ஏற்படுவதற்கு நில அதிர்வு காரணமல்ல என்றும், அனக் கரக்காட்டோ எனும் எரிமலை வெடிப்பின் விளைவாக இருக்கலாம் என்றும் தற்போது சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Read More

தாய்லாந்தில் தவிக்கும் பாகிஸ்தானின் கிறிஸ்துவ அகதிகள்

தாய்லாந்துக்கு சுற்றுலா விசாவில் வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த பல கிறிஸ்துவ அகதிகள் குடிவரவுத் துறை சோதனைகளுக்கு அஞ்சி மறைந்து வாழ்வதாக தெரிய வந்துள்ளது.

2016ல் வெளியான World Watch Monitor என்ற அமைப்பின் கணக்கின் அடிப்படையில், 11,500 பாகிஸ்தானியர்கள் தாய்லாந்தில் தஞ்சம் கோரி இருக்கின்றனர். அதோடு, இன்றைய சூழலில் 2,000 பாகிஸ்தானியர்கள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் மோசமான சூழ்நிலையில் அடைந்து கிடக்கின்றனர்.

“அகதிகளை பாதுகாக்கும் ஐ.நா. அகதிகள் சாசனத்தில் தாய்லாந்து கையெழுத்திடவில்லை என்பதை அறியாமல் பாகிஸ்தான் அகதிகள் இங்கு வந்திருக்கின்றனர்” என்கிறார் பாங்காக்கில் செயல்படும் பாதிரியார் மைக்கேல் கெல்லி.

கடந்த அக்டோபர் மாதம் சட்டவிரோத குடியேறிகளை குறிவைத்து தாய்லாந்து அதிகாரிகள் நடத்திய தேடுதலில், 200 பாகிஸ்தான் கிறிஸ்துவர்கள் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பலர் மீண்டும் பாகிஸ்தானுக்கே நாடுகடத்தப்படக்கூடும் என்ற அச்சமும் உள்ளது.

பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவீதமாக உள்ள கிறிஸ்துவர்கள், இஸ்லாமிய மத வெறியர்களால் தாக்குதலுக்கு உள்ளாவது தொடர்ந்து வருகின்றது. கடந்த காலங்களில், கிறிஸ்துவ மக்களை குறிவைத்து பல குண்டுவெடிப்பு சம்பவங்களும் பாகிஸ்தானின் நிகழ்ந்துள்ளன.

Read More

தமிழனின் முயற்சியில் உருவாகி இருக்கும் சமூக வலைத்தளம்: – சந்தைக்கு வந்த புதிய ஆப்

இணையத்தில் சமூக வலைத்தளம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஃபேஸ்புக், ட்விட்டர் தான். இவை தவிர பல்வேறு இதர சேவைகள் இருந்தாலும் இந்த சேவைகள் பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. மேலும் இவ்வாறு பிரபலமாக இருக்கும் சமூக வலைத்தளங்கள் பலவும் ஒரே மாதிரியான அம்சங்களை வழங்குகின்றன.
அந்த வகையில் சமூக வலைதள சேவையில் புது அம்சங்களுடன் களம் இறங்கியிருக்கும் புதுவரவாக பிக்சாலைவ் (Pixalive) இருக்கிறது. தமிழகத்தின் கிருஷ்ணகிரியை சேர்ந்த பொறியாளரான ராஜசேகர் சுந்தரேசன் முயற்சியில் பிக்சாலைவ் சமூக வலைத்தளம் உருவாகி இருக்கிறது.

பிக்சாலைவ் சமூக வலைத்தளம் இந்தியாவில் உருவாகி இருக்கும் அழகிய, வண்ணமயமான மற்றும் புதுவித அம்சங்கள் நிறைந்த சேவையாக இருக்கிறது. டெக்ஸ்ட், ஆடியோ, புகைப்படம், வீடியோ உள்ளிட்டவற்றை பதிவு செய்ய முடியும். செயலியில் டிரெண்டிங் நாடு, மக்கள், புகைப்படம், வீடியோ, வாய்ஸ் மற்றும் டெக்ஸ்ட் உள்ளிட்டவற்றை பார்க்க முடியும்.

உலகில் வாய்ஸ் நோட் பதிவு செய்யும் வசதி கொண்ட முதல் சமூக வலைத்தளமாக பிக்சாலைவ் இருக்கிறது. வழக்கமான சமூக வலைத்தளங்களில் புகைப்படம், வீடியோ உள்ளிட்டவற்றுடன் டெக்ஸ்ட் பதிவிடும் வசதி வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், பிக்சாலைவ் செயலியில் புகைப்படம், வீடியோவுடன் வாய்ஸ் நோட் சேர்க்கலாம்.

பிக்சாலைவ் செயலியில் பயனர் பதிவிடும் போஸ்ட்கள் அனைத்தும் ஏழு நாட்களில் மறைந்துவிடும். செயலியில் வழங்கப்பட இருக்கும் புது அப்டேட் மூலம் போஸ்ட்கள் பயனர் விரும்பும் வரை செயலியில் இருக்கச் செய்யலாம். தற்சமயம் சில புது வசதிகளை வழங்கும் பிக்சாலைவ் செயலியில் விரைவில் பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்படுகிறது.

பிக்சாலைவ் வழங்கி இருக்கும் அம்சங்கள் வெறும் டீசர் மட்டும் தான், விரைவில் இந்த செயலியில் பல்வேறு புது வசதிகள் வழங்கப்படும் என பிக்சாலைவ் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ராஜசேகர் சுந்தரேசன் தெரிவித்தார். பிக்சாலைவ் செயலி தற்சமயம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும் கிடைக்கும் நிலையில் விரைவில் ஐ.ஓ.எஸ். மற்றும் டெஸ்க்டாப் பதிப்புகள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.

Read More

பிரான்சில் ஜனவரி முதல் 100€ சம்பளம் அதிகரிப்பு

நேற்று பிரெஞ்சு ஜனாதிபதி எலிசே மாளிகையில் இருந்து உரையாற்றியமை தொலைக்காட்சிகளில் ஒனிபரப்பானது.

இதன்போது பிரெஞ்சு ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் மஞ்சள் ஆடைப் போராட்டங்களினதும் மக்களினதும் கோரிக்கைகளிற்கான பதில்களை தெளிவாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மஞ்சள் ஆடைப் போராளிகளின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக SMIC அதிகரிப்பு இருந்தது. இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி எமானுவல் மக்ரோன், 2019 ஆண்டு ஜனவரியிலிருந்து, SMIC (அடிப்படைச் சம்பளம்) சம்பளமானது 100 யூரோவினால் அதிகரிப்பதாக அறிவித்துள்ளார். இந்த 100€ அதிகரிப்பிற்கு முதலாளிகள் அரசிற்கு எந்தவிதமான வரிகளையும் (charges patronales) கட்ட வேண்டியதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறிப்பிட்ட வேலை நேரத்திற்கு அதிகமாக செய்யப்படும் மேலதிக மணித்தியாலங்களிற்கு (heures supplémentaires) வருமான வரியும் அரசிற்கான கழிவுகளும் (charges) 2019 ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து அகற்றப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Read More

உலகை ஆண்ட தமிழர்கள்

2000 ஆண்டுகளுக்கு முன் உலகை ஆண்ட தமிழர்கள் .இப்போது வீழ்ச்சி அடைந்தது ஏன்?
Read More

SHOCKING : ராமர் பிள்ளை வெளியிட்ட மரண வாக்குமூலம் | Herbal Petrol

மூலிகை பெட்ரோல் ராமர்பிள்ளை யூடியூப் இணையதளத்தில் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ’பாரத பிரதமருக்கும், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் ராமர் பிள்ளையின் கருணை மனு’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு தனது மரண வாக்குமூலம் என்று குறிப்பிட்டுள்ளார்.
Read More

ஜெர்மனியில் உள்ள ஒரு நூலகத்தில்நிலத்தடி அறையில் ஓலைச்சுவடிகள்

 ஜெர்மனியில் உள்ள ஒரு நூலகத்தில்நிலத்தடி அறையில் மிகவும்  பழங்கால ஓலைச்சுவடிகள் அறிவியல் பொக்கிஷங்கள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது இப்படியாக மேலைநாட்டவர்கள் தமிழ் அறிவியல் மருத்துவம் விண்வெளி போன்றவற்றை திருடி என்று அவர்கள் கூறுகிறார்கள். நாம் அதை பற்றி அறியாமல்  அவனுக்கு அடிமையாக வாழ்கிறோம்.இலங்கை இனப்படுகொலைக்கு தொடங்குவதற்கான ஆலோசனை ஜெர்மனியிலிருந்து மேலைநாடுகள் தொடங்கியதாக மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி கூறியதை நீங்கள் மனதில் கொள்ளுங்கள்

Read More

திராவிடத்தால் அழிந்தோம் ?தேயும் தமிழும் தமிழர்களும் - தங்கர்பச்சான்

பிறமொழியாளர்கள் தமிழ் தமிழ் தமிழ் என்று சொல்லி தமிழை அழித்ததனால் வந்த வினை
Read More

20 நிமிடங்களிலேயே புகைபிடித்தலை கைவிட்டால் மாற்றம் உண்டா?

புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டால் உடல் நலனிலும், உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்திலும் ஆச்சரியப்படும் வகையில் மாற்றங்கள் நிகழ்கின்றன. அது பற்றி தெரிந்து கொள்வோம்.

* புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து முழுமையாக விடுபட்டு விட்டால் அடுத்த 20 நிமிடங்களிலேயே ரத்த அழுத்தம் இயல்பான நிலைக்கு திரும்பிவிடும். நாடித்துடிப்பும் சீராகும்.



* புகைப்பிடிப்பதால் உடலில் உள்ள ஆக்சிஜன் அளவில் சீரற்ற நிலை உருவாகும். அந்த பழக்கத்தை முழுமையாக கைவிடும் பட்சத்தில் 8 மணி நேரத்திலேயே ஆக்சிஜன் அளவு இயல்பான நிலைக்கு திரும்பிவிடும். ரத்தத்தில் இருக்கும் நிகோடின், கார்பன் மோனாக்ஸைடு அளவும் குறைய தொடங்கிவிடும்.


* புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்துவிடுபட்ட 48 மணி நேரத்திற்குள் உடலில் இருக்கும் கார்பன் மோனாக்ஸைடு வெளியேறிவிடும். நுரையீரல் சீராக செயல்பட தொடங்கி சளித்தொல்லை குறையும். சாப்பிடும் உணவின் சுவையிலும், வாசனையிலும் மாற்றத்தை உணரலாம்.



* 72 மணி நேரத்திற்கு பிறகு சுவாசம் தொடர்பான பிரச்சினைகளில் மாற்றம் ஏற்பட தொடங்கிவிடும். அதற்கான சிகிச்சைகளை தொடரும்போது படிப்படியாக சுவாச பிரச்சினையில் இருந்து விடுபட்டுவிடலாம். உடலில் சுறுசுறுப்பும் அதிகரிக்கும்.



* புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட 2 முதல் 12 வாரங்களில் ஒட்டுமொத்தமாக ரத்த ஓட்டம் சீராகும்.



* மூன்று முதல் ஒன்பது மாதங்களில் நுரையீரலின் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும். சளி, மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகளில் இருந்து படிப்படியாக விடுபட்டு விடலாம்.



* ஓராண்டு கழித்து புகைப்பிடிப்பவர்களுடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த உடல் நலனிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும். பக்கவாதம், மாரடைப்பு போன்ற பிரச்சினைகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம்.
Read More

அது நாடார்களின் கட்சி.. நாம் தமிழரை விளாசும் மதிமுகவினர்.!

தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரைச் சொல்லி புலம் பெயர் தமிழர்களிடமிருந்து பணம் பறிக்கும் பிழைப்புவாத கும்பல் நாம் தமிழர் கட்சி என மதிமுகவின் முன்னணி தலைவர்களுள் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நேர்காணல் ஒன்றில் சீமானையும், நாம் தமிழர் கட்சியையும் காட்டமாக விமர்சித்திருந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் மீண்டும் உருவெடுத்துள்ளது நாம் தமிழர், மதிமுக மோதல்.

புலிகளின் பெயரைச் சொல்லி வைகோ எவரிடத்திலேனும் 1 ரூபாய் பணம் பெற்றிருப்பாரா? ஆனால் அத்தகைய இழிசெயலை செய்துவரும் நாம் தமிழர் கட்சியினர் ஈழத்திற்காகவும், எழுவர் விடுதலைக்காகவும் இங்கு செய்தது என்ன? ஆனால், தனது சொந்த பணம் 75 லட்சத்திற்கும் மேல் செலவு செய்து ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எழுவரின் தூக்குத்தண்டனையை தடுத்து நிறுத்தியவர் எங்கள் வைகோ என மதிமுகவினர் காட்டமான விமர்சனங்களை சீமானுக்கு எதிராக முன் வைத்துவருகின்றனர்.

அதே சமயம், வைகோ தெலுங்கர் என நாம் தமிழர் கட்சியினர் வசைபாட, அதற்கு பதிலளிக்கும் மதிமுகவினர் புலிகளின் தலைவரால் அங்கீகரிக்கப்பட்டவர் வைகோ. தமிழக வாழ்வுரிமை களங்களில் உறுதியாக நிற்பவர்.

ஆனால், பாடப்புத்தகத்தில் தனது சமூகமான நாடார்களைப்பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்று கூறி குற்ற பின்புலம் உள்ளவர்களுடன் கூட்டு சேர்ந்து போராடுபவர்கள் அல்ல நாங்கள் என நாம் தமிழர் கட்சியை காட்டமாக விமர்சித்துவருகின்றனர் மதிமுகவினர்.
Read More

நடிகர் ராதா ரவி பற்றிய உண்மையை ஆதாரத்துடன் வெளியிட்ட பாடகி சின்மயி! பாலியல் சர்ச்சையில் அடுத்த அதிரடி

பின்னணி பாடகி சின்மயி சமீபகாலமாக Me Too ல் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்ததை தொடர்ந்து பல சர்ச்சைகள் எழுந்தது. பத்திரிக்கையாளர் சந்திப்பு, தொலைக்காட்சி விவாதத்திலும் கலந்து கொண்டார்.

இதன் பின் சில நாட்களில் அவர் டப்பிங் யூனியலிருந்து நீக்கப்பட்டார். இது சின்மயிக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. சந்தா பணம் செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த டப்பிங் சங்கத்தில் தலைவராக இருக்கும் ராதா ரவி சின்மயி பற்றி விமர்சனங்களை எடுத்து வைத்தார். இந்நிலையில் அவருக்கு டத்தோ பட்டம் பற்றி உண்மையை வெளியிட்டுள்ளார்.

இதில் ராதா ரவிக்கு வழங்கப்பட்டம் பொய்யானது. மலேசியா நாட்டின் மெலோகா மாநில அரசுக்கு எழுதிய கடிதத்துக்கு வந்த பதிலை கொண்டு அவர் ராதா ரவிக்கு அந்த அரசு அப்பட்டத்தை வழங்கியதாக ஆவணத்தில் இல்லை. இந்தியாவில் நடிகர் ஷாருக்கானுக்கு மட்டுமே இப்பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியப்படுத்தியுள்ளார்.


Chinmayi Sripaada

@Chinmayi
 · Nov 29, 2018
Replying to @Chinmayi
Turns out his name is not the Govt records where other awardees that we would know of are Jackie Chan and Mr Shah Rukh Khan.http://www.istiadat.gov.my/index.php/component/semakanlantikanskp/ …
Enter their names in the field and you’ll find the year they have been awarded. There are corresponding news reports as well.


Chinmayi Sripaada

@Chinmayi
However, my dear jimblippippiees on Instagram did some more sleuthing and I eventually wrote to the Chief Secretary Public Affairs of the Chief Minister of Melaka, from where Mr. Radha Ravi claims to have been awarded the title and I got this response. pic.twitter.com/jZqzjOYLw2
Read More

ஓடும்பேருந்தில் சுயஇன்பம் அனுபவித்த நபர் - அதிரவைத்த புகைப்படத்தை வெளியிட்ட சின்மயி!

தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாகவும், டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றியவர் சின்மயி. இவர் சமீபகாலமாக தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் மட்டுமல்லாது மற்றவர்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்களையும் #Metoo மூலமாக வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் சென்னை கேளம்பாக்கத்திலிருந்து சோளிங்கநல்லூருக்கு செல்லும் பேருந்தில் நபர் ஒருவர் அங்கிருந்த பெண்களை வெறித்துபடி இருந்தது மட்டுமல்லாமல் பொதுவெளியில் சுய இன்பம் அனுபவித்துள்ளார்.

கோபமான அங்கிருந்த பெண் ஒருவர் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இதை சின்மயி இந்த பகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Read More

புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டம்மான் நோர்வேயில் உயிருடன்?

விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டம்மான் இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை அவர் நோர்வேயில் உயிருடன் இருக்கின்றார் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நேற்றைய தினம் மட்டக்களப்பில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் காரணமாகயிருக்கலாம் எனவும் கருணா தெரிவித்துள்ளார்.

ரிவிர என்ற சிங்கள வார இதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் புலனாய்வு பிரிவை செயலிழக்கச் செய்துள்ளதுடன் தேசிய பாதுகாப்பை புறக்கணித்து பாதுகாப்பு படையினரிற்கு அவமரியாதையை ஏற்படுத்தியுள்ளது எனவும் கருணா தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடானது, விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு மீண்டும் புத்துயுர் ஊட்டும் நடவடிக்கையாகவே அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பொட்டு அம்மான் இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை நோர்வேயில் மறைந்து வாழ்கின்றார் என கருணா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக விடுதலைப்புலிகள் மீண்டும் தலைதூக்கினாலும் ஆச்சரியமில்லை என குறிப்பிட்டுள்ள கருணா இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு நானும் உதவியுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்
Read More

தமிழ் மக்களை நசுக்குவார்களோ அவர்களே சிங்கள மக்களின் கூடுதலான வாக்கைக் கவரமுடியும்

தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் உறுதியான நிகழ்ச்சி நிரலொன்று இன்றி செயற்பட்டமையே தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்கும் இக்கட்டான இன்றைய கையறு நிலைக்கு காரணம் என வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியிருக்கின்றார்.

எனின் நடந்து முடிந்துவிட்ட இந்த விடையங்கள் குறித்து கதைத்துக்கொண்டிருப்பதை விடுத்து, இனிமேலாவது, கட்சி நலன்களைப் புறந்தள்ளிவிட்டு கொள்கை அடிப்படையில் நிகழ்ச்சி நிரல் ஒன்றுக்கு அமைவாக நிறுவப்பட்ட செயற்பாட்டை தமிழர் தரப்பு முன்னெடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை போர் குற்றச்சாட்டுக்களுக்கு முகம்கொடுத்துள்ள சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சியை பிடிக்க முற்பட்டுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத் தொடரில் ஸ்ரீலங்கா தொடர்பான சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கான பொறிமுறை ஒன்றை அமைப்பதற்கான முன்மொழிவை முன்வைக்க வேண்டும் என்றும் வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இறுதிக்கட்ட யுத்ததில் இடம்பெற்ற போர் குற்றங்கள் உள்ளிட்ட மோசமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகியுள்ள சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவை கடந்த 26 ஆம் திகதி புதிய பிரதமராக தற்போதைய அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நியமதிருந்தார்.

இதனால் ஸ்ரீலங்காவில் அரசியல் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதுடன் பல்வேறு தரப்பினரும் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் அரசியல் குழப்ப நிலை தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் யார் கூடுதலாக தமிழ் மக்களை நசுக்குவார்களோ அவர்களே சிங்கள மக்களின் கூடுதலான வாக்கைக் கவரமுடியும் என்ற உத்தியை ஸ்ரீலங்காவின் தற்போதைய அரச தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் கையில் எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இன்று அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது என்று எமது அரசியல்வாதிகள் புலம்பத்தொடங்கியிருக்கின்றார்கள். இதில் எந்த அர்த்தமும் இல்லை. ஏனெனில் இதுதான் வரலாறு என்று நன்கு தெரிந்து தான், நாம் அவர்களுடன் கரம் கோத்தோம். பதவிகளைப் பெற்றோம். பணம் பெற்றோம். அவர்களுடன் சேர்ந்து உலகுக்கு நல்லாட்சி என்றோம். ஒருபடி மேலே சென்று அவர்களை நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிட்டு புகழ்ந்து பேசினோம். நாமே அவர்களை மனித உரிமைகள் சபையில் பிணை எடுத்தோம். அரசியல் அமைப்பு மாற்றம் என்ற ஒரு மாயைக்குள் எமது இனப்பிரச்சினைக்கான தீர்வைக் கொண்டு சென்று எமது தனித்துவத்தையும் அரசியல் அபிலாஷைகளையும்

கரைத்துவிட்டோம். ஆனால் சிங்கள அரசியல்வாதிகளோ எம்மைப் பயன்படுத்தி தமக்கு எதிரான சகல தடைகளையும் உடைத்துவிட்டு எந்த விதமான குற்ற உணர்வும் இன்றி தமக்கிடையில் ஒரு அதிகார போட்டியில் இறங்கியுள்ளனர்.

தான் உயிருடன் இருக்கும் வரை வட கிழக்கு இணைப்புக்கோ சமஷ்டித் தீர்வுக்கோ இடமளிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார். அவரை வைவதால் ஆவது ஒன்றுமில்லை.அவருடன் சேர்ந்து பேசுவதாலும் எதுவும் ஆகப்போவதில்லை. சர்வதேசங்கள் தான் இதுபற்றி கவனஞ் செலுத்த வேண்டும். ஒரு நிகழ்ச்சிநிரல் இன்றி செயற்பட்டமையே இன்றைய எமது இந்த கையறு நிலைக்கு காரணமாகும். எது எவ்வாறெனினும், நடந்தவை நடந்து முடிந்துவிட்டன. இனிமேலாவது, கட்சி நலன்களைப் புறந் தள்ளிவிட்டு கொள்கை அடிப்படையில் நிகழ்ச்சி நிரல் ஒன்றுக்கு அமைவாக நிறுவப்பட்ட செயற்பாட்டை முன்னெடுக்கவேண்டும்.இருட்டில்

கையாட்டிப் பார்க்காமல் பாதை தெரிந்து பயணிக்க வேண்டும். இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் சிங்கள ஆட்சியாளர்களின் உண்மையான மனோநிலையை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்ட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ள முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன், ஒற்றையாட்சி அடிப்படையிலான இலங்கை அரசியல் அமைப்புக்குள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கட்டமைப்பு சார் தடைகளை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வழி வகுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்குச் சமன் என்பதைப் புரிந்துகொண்டு காலம் தாழ்த்தாது தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனால் ஸ்ரீலங்காவில் எவர் ஆட்சியில் உள்ளார்கள் என்று பார்த்து செயற்படாது பொறுப்புக்கூறலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இலங்கை அரசு என்ற ரீதியில் போர்க்குற்ற விசாரணைக்கான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்

இறுதி யுத்தத்தில் என்ன நடைபெற்றது, எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள், எத்தனை பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்பது போன்ற உண்மைகளை எடுத்துச் சொல்ல முடியும். இதனால் புரிந்துணர்வை ஏற்படுத்தி உண்மையான இன நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியும். இல்லாவிட்டால் குற்றம் இழைத்தவர்கள் தம்மைப் பாதுகாப்பதற்காக போலித் தேசியவாதத்தைக் கையில் எடுத்து இன முரண்பாட்டை மேலும் சிக்கல் நிலைக்கு உட்படுத்த வேண்டும்.
Read More

சமுக நீதி பேசுபவர்களை சைமன், டேனியல் என்று அழைக்கிறார்கள், ஏன்?

 சமுக நீதி பேசுபவர்களை சைமன், டேனியல் என்று அழைக்கிறார்கள், ஏன்?
Read More

சீக்கியர்கள் நடத்திய போராட்டத்தில் தேசிய தலைவர் பிரபாகரன் புகைப்படம்

சமீபத்தில் சீக்கியர்கள் நடத்திய போராட்டம் ஒன்றில், தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களது புகைப்படம் கொண்ட பதாதைகள் காணப்பட்டது. அதில் சீக்கிய தலைவரது புகைப்படம், தமிழ் தலைவரது புகைப்படத்தில் பிரபாகரன் அவர்களின் புகைப்படம் பொறிக்கப்பட்டு இருந்தது. அதாவது வேற்றின மக்களை பொறுத்தவரை, தமிழர்களுக்காக அவர்களின் உரிமைக்காக போராடியது தலைவர் பிரபாகரன் என்பதே அவர்கள் புரிந்துகொண்ட விடையம்.

அட வேற்றின மக்களே இதனை நன்கு புரிந்துவைத்திருக்கிறார்கள். ஆனால் சில பல அரசியல்வாதிகள் தாம் 40 ஆண்டுகாலமாக அரசியலில் செய்வதாக பீற்றிகொள்கிறார்கள். இது தான் வேடிக்கையான விடையம்.
Read More

ஓரினச்சேர்க்கை பாவத்தின் அடிப்படை நோக்கம் என்ன?

ஓரினச்சேர்க்கை பாவத்தின் அடிப்படை நோக்கம் என்ன
Read More

கருப்பு கரம் தொட்ட போது சிலுவையின் கரம் மீட்டது

நாகரிகம் என்ற பெயராலே குடிப்பழக்கத்துக்கும் போதைப் பொருளுக்கும் இச்சைகளுக்கும் அடிமையாயிருந்த இந்த வாலிபர் கருப்பு கரம் பிடித்திருந்தது
Read More

தமிழ்த் தலைமைத்துவங்களின் தவறுகளை நாம் இனிமேலும் விடக் கூடாது

தமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகதள் சந்தர்ப்பங்களை நழுவ விட்டு நாடாளுமன்ற பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்தது.அப்போது ஆட்சியாளர்களுக்கு நிபந்தனைகள் எதுவுமற்ற ஆதரவை நல்க முற்பட்டதனூடாக அரசின் நன்மதிப்பைப் பெற்றுக்கொண்டது.

தமதுஅரசியல் தீர்வு விடயங்களை சுமூகமாக கையாளமுடியும் என்ற எதிர்ப்பை எமது லைவர்கள் கொண்டிருந்தனர். ஆனால் அது கை கூடவில்லை.எமது அப்போதைய தலைவர்களின் தூரநோக்கற்ற செயல்போல அதே பிழையை தற்போது எமது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைகளும் செய்துவருகின்றவென வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கலாநிதி க.சர்வேஸ்வரனால் எழுதப்பட்ட நூலின் அறிமுக நிகழ்வு நல்லூரில் இன்று நடைபெற்றிருந்தது.அங்கு உரையாற்றிய முதலமைச்சர் வரலாற்றில் இருந்து தமது பிழைகளை இனங்காண மறுக்கின்றார்கள். எமது அரசியல் வரலாற்றில் சேர்.பொன்.இராமநாதன் தொடக்கம் இரண்டாயிரமாம் ஆண்டுதமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமை வரையான தமிழ் அரசியல் தலைவர்கள் சிறந்த புத்திக்கூர்மையுள்ளவர்களாக இருந்த போதும் எப்போது மேமேலாதிக்கச் சிந்தனையுடன் செயற்பட்ட சிங்களத் தiலைமைகளுக்கு எம்மவரின் அரசியல் நோக்கங்களைப் புரிந்துகொள்வதற்கும் தமிழ்த் தலைமைகளைப்பிரித்தாளும் தன்மைகளை மேலோங்கச் செய்வதற்கும் முடியுமாக இருந்தது. காரணம் எமது தலைமைகள் புகழ்ச்சிக்கும் மாய்மாலத்துக்கும் எடுபடக் கூடியவர்கள்.

பேரறிஞரான கணிதவியல் பேராசிரியரான சி.சுந்தரலிங்கம் அவர்கள் சிங்களத் தலைவர்களின் புகழ்ச்சியில் மயங்கி தம் இனத்துக்குக் கெடுதல் விளைவித்த“சிங்களவர் மட்டும்”அமைச்சர் குழாமை அமைக்க அடிஎடுத்துக் கொடுத்தார். அவ்வளவுக்கும் 5ம் தரத்திற்குமேல் படிக்காத சிங்களத் தலைவர் ஒருவர் பேராசிரியரை“உன்னைவிட இந்தவையத்துள் யாருண்டு”என்றுகேட்டதால் அதில் மயங்கி தனது கணக்கியல் திறனை அவருக்குக் காட்டிவிட்டார். இப்பொழுது எங்கள் தலைமைத்துவத்தினரிடையேயும் தம்மைவிட எவரும் இல்லை என்ற சிந்தனை இருந்து வருகின்றது. இவ்வாறான சிந்தனை உடையவர்களைச்சிங்களத் தலைவர்கள் இலேசாகத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளுகின்றார்கள்.

இன்று பலரும் அரசுடன் இணைந்து கொண்டு அபிவிருத்திகளை மேற்கொள்ளவில்லையென்று என்னைப் பேசுகின்றார்கள். ஆனால் தமிழ் மக்களுக்குரிய உரித்துக்கள் முதலில் உறுதிசெய்யப்படவேண்டும். அதன் பின்னர் அபிவிருத்திப் பணிகளை துரிதமாக முன்னெடுக்கமுடியும் என்பதே எமது கொள்கை வழிச்சிந்தனை. உரித்துக்கள் எதுவும் உறுதிசெய்யப்படாதநிலையில் வழங்கப்படுகின்றஅபிவிருத்திகள் அனைத்தும் ஏதோ ஆட்சியாளர்களின் அன்பளிப்புக்களாக கருதப்படுமேயன்றி அது தமிழர்களின் உரித்துக்களாக கொள்ளப்படமாட்டா.நாம் அவர்களுக்கு என்றென்றும் கடமைப்பட்ட நிலையிலேயே இருக்க நேரிடும்.

எமது இனம் எப்படிப்போனாலும் பரவாயில்லை அபிவிருத்திகள் மட்டும் நடைபெறவேண்டும் எனநான் சிந்தித்திருப்பின் எனது தனிப்பட்ட நட்புக்களினூடாக பலவற்றை சாதித்திருக்க முடியும்.கொழும்பில் பிறந்து வளர்ந்தவன் நான். அங்கு கல்வி கற்றவன்.ஆனால் எதிர்காலத்தில் நானும் ஒருவரலாற்றுத் தவறை இழைத்தவனாகவே கொள்ளப்படுவேன். இதனால்தான் எனது தனிப்பட்ட நட்புக்களையும் துறந்து உரித்துக்களுக்காகத்தொடர்ந்து குரல் கொடுத்துவருகின்றேன்.

அண்மையில் ஜனாதிபதி தமிழ்த் தலைவர்களுள் என்னை மட்டும் தனது செயலணியில் சேர்த்திருந்தார். ஆனால் எமது உரிமைகளைக் கேட்டு நான் செயலணியைப்பகிஷ்கரித்துள்ளேன். எனது எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்கள் பற்றி எதிர்வரும் 24ம் திகதி நடைபெறவிருக்கின்ற தமிழ் மக்கள் பேரவையின் சிறப்புக் கூட்டத்திலேயே வெளிப்படுத்த இருப்பதால் நான் எனது எதிர்கால அரசியல் பற்றி தற்போது பேசாது விடுகின்றேன்.எனினும் கலாநிதி சர்வேஸ்வரன் அவர்கள் தமது நூலில் குறிப்பிட்டுள்ள தமிழ்த் தலைமைத்துவங்களின் தவறுகளை நாம் இனிமேலும் விடக் கூடாது என்பதில் நான் திடமாக உள்ளேனென முதலமைச்சர் சிவி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Read More

பிரபல மந்திரவாதியின் இன்றய நிலை

மந்திரத்தை தொழிலாக கொண்ட பிரபல மந்திரவாதியின் இன்றய நிலை 
Read More

சிம்மயி- அம்பலமாகும் உண்மைகள் இதோ X-RAY ரிப்போர்ட்

சில மாதங்களுக்கு முன்னர் ஆண்டாள் ஒரு தேவதாசி என்று பேசி, பல பிராமணர்களின் எதிப்பை சம்பாதித்துக்கொண்டவர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள். இன் நிலையில் தன்னை பாலியல் வன் கொடுமைக்கு அவர் ஆளாக்கினார் என்று சிம்மயி கூறுவதில் எதுவித உண்மையும் இல்லையென்கிறார்கள் சிலர். காரணம் என்னவென்றால் தன்னை பாலியல் வல்லுறவுக்கு அழைத்ததாக சிம்மயி கூறும், ஆண்டுக்குப் பின்னரே அவர் திருமணம் செய்துகொண்டார். சிம்மயின் திருமண விழாவுக்கு வைரமுத்துவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கே சென்ற வைரமுத்துவோடு சிம்மயி மற்றும் அவரது அம்மா சிரித்துப் பேசி கூடிக் கும்மியடித்துள்ளார்கள்.

அப்படி என்றால் சிம்மயி ஏன் வைரமுத்துவை தனது திருமண விழாவுக்கு அழைக்கவேண்டும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா ? இதேவேளை சிம்மயி மற்றும் அவரது தாயார் ஆகியோர்
பிரேமானந்த சாமியிடம் சென்று ஆசிர்வாதம் பெற்ற புகைப்படங்களும் வெளியாகி சிம்மயியின் முகத்திரையைக் கிழித்துள்ளது. வைரமுத்து அவர்கள் ஆண்டாள் தொடர்பாக தனது விமர்சனத்தை வைக்க. சில மாதங்கள் பொறுத்திருந்த இந்தித்துவ ப.ஜ.க சிம்மயி என்னும் பிராமணப் பெண்(ஐயர்) ஊடாக அவர் மீது பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இதற்காக பெரும் பணத்தை சிம்மயி பெற்றுக்கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

தன்னை சுவிஸ் நாட்டுக்கு கூட்டிச் சென்று, அங்கே உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து தவறாக நடக்க வைரமுத்து முயற்ச்சி செய்ததாக கூறுவதை. சுவிஸ் நாட்டில் உள்ள ஈழத் தமிழரான சுரேஸ் என்பவர் மறுத்துள்ளார். அன்றைய தினம் சிம்மயி தனது வீட்டில் தான் தங்கி இருந்தார் என்று அவர் தெரிவித்து பெரும் வெடிகுண்டு ஒன்றி தூக்கிப் போட்டுள்ளார்.
Read More

சிம்மயி- அம்பலமாகும் உண்மைகள் இதோ X-RAY ரிப்போர்ட்

No comments     
சில மாதங்களுக்கு முன்னர் ஆண்டாள் ஒரு தேவதாசி என்று பேசி, பல பிராமணர்களின் எதிப்பை சம்பாதித்துக்கொண்டவர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள். இன் நிலையில் தன்னை பாலியல் வன் கொடுமைக்கு அவர் ஆளாக்கினார் என்று சிம்மயி கூறுவதில் எதுவித உண்மையும் இல்லையென்கிறார்கள் சிலர். காரணம் என்னவென்றால் தன்னை பாலியல் வல்லுறவுக்கு அழைத்ததாக சிம்மயி கூறும், ஆண்டுக்குப் பின்னரே அவர் திருமணம் செய்துகொண்டார். சிம்மயின் திருமண விழாவுக்கு வைரமுத்துவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கே சென்ற வைரமுத்துவோடு சிம்மயி மற்றும் அவரது அம்மா சிரித்துப் பேசி கூடிக் கும்மியடித்துள்ளார்கள்.

அப்படி என்றால் சிம்மயி ஏன் வைரமுத்துவை தனது திருமண விழாவுக்கு அழைக்கவேண்டும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா ? இதேவேளை சிம்மயி மற்றும் அவரது தாயார் ஆகியோர் பிரேமானந்த சாமியிடம் சென்று ஆசிர்வாதம் பெற்ற புகைப்படங்களும் வெளியாகி சிம்மயியின் முகத்திரையைக் கிழித்துள்ளது. வைரமுத்து அவர்கள் ஆண்டாள் தொடர்பாக தனது விமர்சனத்தை வைக்க. சில மாதங்கள் பொறுத்திருந்த இந்தித்துவ ப.ஜ.க சிம்மயி என்னும் பிராமணப் பெண்(ஐயர்) ஊடாக அவர் மீது பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இதற்காக பெரும் பணத்தை சிம்மயி பெற்றுக்கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

தன்னை சுவிஸ் நாட்டுக்கு கூட்டிச் சென்று, அங்கே உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து தவறாக நடக்க வைரமுத்து முயற்ச்சி செய்ததாக கூறுவதை. சுவிஸ் நாட்டில் உள்ள ஈழத் தமிழரான சுரேஸ் என்பவர் மறுத்துள்ளார். அன்றைய தினம் சிம்மயி தனது வீட்டில் தான் தங்கி இருந்தார் என்று அவர் தெரிவித்து பெரும் வெடிகுண்டு ஒன்றி தூக்கிப் போட்டுள்ளார்.
Read More

அமெரிக்க ஜனாதிபதி கார் என்ன செய்யும் தெரியுமா ?

அமெரிக்க ஜனாதிபதி பயணிக்கும் கார் உலகில் மிகவும் பாதுகாப்பான கார். அசைக்கவே முடியாது என்கிறார்கள். இதில் அப்படி என்ன இருக்கிறது என்கிறீர்களா ? இதோ ஒரு செக்கியூரட்டி கம்பெனி போட்டு உடைத்துள்ள தகவல் ,
.

இந்த காரின் டயருக்கு நீங்கள் எத்தனை தடவை வேண்டும் என்றாலும் சுடலாம். பஞ்சர் ஆனா உடனே தானாகவே காற்று நிரம்பிவிடும். பெற்றோல் டாங் இருக்கும் இடத்தை நோக்கி சுட்டால் கூட சூடு பிடிக்காது. 5 அங்குல அகல கண்ணாடி. இதனால் இதனையும் சுட முடியாது. காருக்கு முன்னால் டியர் காஸ் அடிக்கும் திறமை. இதனால் ஒரு கூட்டமே காரை வழி மறித்து தாக்குதல் நடத்தினால் கூட. உடனே காருக்கு முன்னாலும் பின்னாலும் டியர் காஸ் வெளியேறி. அவர்களை திணறவைக்கும். காருக்கு உள்ளே யார் பயணிக்கிறார்களோ. அவர்களுக்கு கொடுக்க என செயற்கை ரத்தம் எப்பொழுதும் காரில் இருக்கும். அத்தோடு உயிர் காக்கும் அதி நவீன மருத்துவ கருவிகள் உள்ளது.

இது போக அதி நவீன குறி சுடும் துப்பாக்கி, ஏதாவது அசிட் அல்லது கெமிகல் வீசினால் அதனை தாக்கும் பிடிக்கும் ரப்பர்கள் கண்ணாடியை பாதுகாக்கிறது. 8 அங்குல விட்டம் கொண்ட இரும்பு தகடுகள் காரின் இரு பக்கமும் உள்ளதால் அருகே குண்டு வெடித்தால் கூட காருக்கு எதுவும் நடக்காது. இது மட்டுமால் இதே பாதுகாப்பு காருக்கு கீழேயும் உள்ளது. இதனால் நிலக் கண்ணிவெடி வெடித்தாலும் கார் அசையாது. இது போக காரில் பயணிக்கும் ஜனாதிபதி உடனடியாக துணை ஜனாதிபதி மற்றும் பெண்டகன்(பாதுகாப்பு துறையோடு) உடனடியாக தொடர்பு கொள்ள வசதிகள் உள்ளது.

இப்ப சொல்லுங்கள் இந்த காரை தகர்க்க முடியுமா ? இதே போல தான் அமெரிக்க ஜனாதிபதி பயணிக்கும் விமானத்திலும் பல்வேறு பாதுகாப்புகள் உள்ளது. அதனை ஏர் போஸ் 1 என்று அழைப்பார்கள். ஏவுகணை ஏவினால் கூட, அந்த ஏவுகணையை திசை திருப்பி விடும் துல்லியமான கருவிகள் ஏர் போஸ் 1 விமானத்தில் உள்ளது.

Read More

விமானத்தில் வந்து கொழும்பு நகரைத் தாக்கி அழிக்கலாம் என்ற அச்சம் அரசாங்கத்திடம்

இறுதி யுத்தத்தின் இறுதி இரு வாரங்களிலும் விடுதலைப் புலிகள் பலமான நிலையிலேயே போரிட்டு வந்ததாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா சபையில் பங்கேற்க நியூ யோர்க் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால அங்கு இலங்கைச் சமூக த்தினரைச் சந்தித்த போதே, இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இறுதி தருணத்திலும், அவர்கள் மீண்டெழுந்து விமானத்தில் வந்து கொழும்பு நகரைத் தாக்கி அழிக்கலாம் என்ற அச்சம் அரசாங்கத்திடம், மேலோங்கி இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக, தங்களைப் பாதுகா த்துக் கொள்வதற்காக இறுதி தருணத்தில் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்புச் செயலாளர், இராணுவத் தளபதி ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறியிருந்த நிலையில், தானே யுத்தத்தினை முடித்து வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, இலங்கையில் இடம் பெற்ற யுத்தம் நிறைவடைந்த இறுதி தருண ங்களை எல்லோரையும் விட நானே நன்கு அறிந்தவன். யுத்தத்தின் இறுதி இரு வாரங்கள் நானே நாட்டின் பதில் பாதுகாப்பு அமை ச்சராக இருந்தேன்.

முன்னாள் ஜனாதிபதியோ, முன்னாள் பிரதமரோ, இராணுவத் தளபதியோ, முன் னாள் பாதுகாப்புச் செயலாளரோ யுத்தத்தை வெற்றி கொண்ட இரு வாரங்களில் நாட்டில் இருக்கவில்லை.

இது குறித்து பலருக்கு ஞாபகம் இருக் காது. அவர்கள் ஏன் நாட்டை விட்டு சென்றார்கள் என்று கூட யாருக்கும் தெரியாது. ஆனால் அவர்கள் ஏன் சென்றார்கள் என்று எனக்கு தெரியும்.

விடுதலைப்புலிகள் விமானம் மூலம் வந்து கொழும்பில் தாக்குதல் நடத்தும் போது, கொழும்பில் ஒரு பதற்றமான நிலைமை ஏற்பட்டிருந்தது.

விடுதலைப் புலிகள் யுத்தத்திலிருந்து பின் வாங்கப் போவதில்லை. அவர்கள் தென் னிந்தியாவில் அதாவது சென்னையிலோ, அல்லது வேறு எங்கு காட்டுப்பகுதியிலிரு ந்தோ விமானம் மூலம் வந்து கொழும்பில் குண்டு மழை பொழிந்து கொழும்பை நாச ப்படுத்துவார்கள் என்று, அரசாங்கத்திற்கு தகவல் கிடைத்திருந்தது.

அதனால்தான் அவர்கள் அனைவரும் பயந்து நாட்டை விட்டு வெளியேறினார்கள். இதுதான் உண்மைக் கதை. இந்த இரு வாரங்களில் நான் கொழும்பில் இருக்கவில்லை.

என் இருப்பிடத்தை அறிந்து கொள்வார்கள் என்ற காரணத்தினால் நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலேயே தங்கியிருந்தேன். இதுதான் யுத்தத்தின் அனுபவம். விடுதலைப் புலி களின் ஐந்து தாக்குதல்களை எதிர் கொண்ட வன் நான் என தெரிவித்துள்ளார்.

Read More

பிரபாகரனை மீட்க சோனியா காங்கிரஸ் அரசாங்கம் கப்பல் அனுப்புவதாக உறுதியளித்திருந்தது ???

2009 ஆம் ஆண்டு போரின் இறுதிக் கட்டத்தின்போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மீட்க சோனியா காந்தி தலைமையிலான அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் கப்பல் அனுப்புவதாக உறுதியளித்திருந்தது என பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும், ராஜ்ய சபா உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :- போரின் இறுதி கட்டத்தின்போது, அப்போதைய இந்திய அமைச்சர் ப.சிதம்பரம், பிரபாகரனுக்கு தகவல் ஒன்றை வழங்கியிருந்தார். பிரபாகரனை காப்பாற்ற இந்திய கடற்படை வரும் என்றும், அதற்காக காத்திருக்குமாறும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பிரபாகரன் காட்டு பகுதியில் இருந்து கடற்கரையை நோக்கி பயணித்தபோது அங்கு கடற்படை சென்றது. ஆனால் அது இலங்கை கடற்படை.
இந்திய கடற்படை கப்பல் புறப்பட தயாராகியிருந்த போதும், அதிகாரிகளிடமிருந்து வெளிப்பட்ட கடுமையான எதிர்ப்பு காரணமாக அந்தக் கப்பல் புறப்படவில்லை.
எனினும், திட்டம் மாற்றப்பட்டமை குறித்து அப்போதைய காங்கிரஸ் தலைமையினால் பிரபாகரனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளதாக குறித்த இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை தொடர்பிலும், போர் தொடர்பிலும் சுப்ரமணியன் சுவாமி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். அவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் புது டில்லியில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பை ஏற்று மஹிந்த ராஜபக்ஷ அதில் கலந்து கொண்டிருந்தார். இதேநேரம், தமது இந்திய விஜயத்தின் போது அந்த நாட்டு ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல்களில் மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு தகவல்களையும் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், இறுதிப் போர் குறித்து தற்போது மேற்கண்ட தகவலை சுப்ரமணியன் சுவாமி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

விஸ்வரூபம் 2 திரைவிமர்சனம்

விஸ்வரூபம் 2 திரைவிமர்சனம் ஒரு நகைசுவை பார்வை 

Read More

உண்மையைக் கூறுவதால் எவரும் பயங்கரவாதிகள் ஆகிவிடமாட்டோம்! – முதலமைச்சர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்ற உண்மையைக் கூறுவதால் எவரும் பயங்கரவாதிகள் ஆகிவிடமாட்டோம் என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தெரிவித்துள்ளார். அந்த நாள் இன்று வந்திடாதோ என்று அமைச்சர் விஜயகலா கூறுவதால் அவர் தீவிரவாதி ஆகிவிட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை பயங்கரவாதியாக அடையாளப்படுத்தி அவரது அமைச்சுப் பதவியை பறிக்க வேண்டும் என்று தென்னிலங்கை அரசியல்வாதிகள் ஆவேசமாக கூறிவருவது தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் தமிழ் மக்கள் போரினால் ஏற்பட்ட பாதிப்புக்களை தவிர, பாதுகாப்பாகவே இருந்தார்கள் என்பது உலகறிந்த உண்மை. அதனால் இந்த உண்மையை கூறிய விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதையோ அல்லது அவரது அமைச்சுப் பதவியை பறிப்பதோ நியாயமாகி விட முடியாது.

தமிழ் மக்களின் தற்போதைய நிலைமைகள் குறித்த உண்மையை கூறுபவர்களை பயங்கரவாதிகளாக அடையாயப்படுத்துவதை தென்னிலங்கை அரசியல்வாதிகள் நிறுத்த வேண்டும். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுத்து அவை குறித்து உண்மையான கலந்துரையாடல்களை நடத்த முன்வர வேண்டும்.

வடமாகாணத்தின் தற்காலப் பாதுகாப்பற்ற நிலையையும் முன்னைய பாதுகாப்பான நிலையையும் பற்றி விமர்சிக்க எவருக்கும் உரித்துண்டு. நான் அண்றைய கூட்டத்தில் இருந்தேன். ஆனால் கௌரவ விஜயகலா கூறிய சொற்களைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஒலிவாங்கியில் ஏதோ பிழை இருந்தது. பின்னர் அவரிடமே கேட்டறிந்தேன். இன்றைய பாதுகாப்பற்ற நிலை மாறி பாதுகாப்பான சூழல் ஏற்பட வேண்டும் என்று அவர் கூறியதில் என்ன பிழை என்று எனக்குத் தெரியவில்லை.

முன்பு எமது மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்து வந்தார்கள் என்பது உண்மை. போர்க்காலத்தில் ஒரு பெண் தனிமையில் நகை நட்டு அணிந்து கொண்டு இருள் வந்த பின்னர் வீடு நோக்கி நடந்து சென்றால் அவருக்கு எந்தத் தொந்தரவோ பாதிப்போ ஏற்படாதிருந்தது என்பது உலகறிந்த உண்மை. இன்று அப்படியா? வாள்வெட்டு, வன்புணர்ச்சி, வன்செயல்கள், போதைப்பொருள் பாவனைகள் அதிகரித்து வருகின்றன.

இலஞ்ச ஊழல்கள் மலிந்து காணப்படுகின்றன. அதனால்தான் நான் இராணுவத்தைத் திரும்ப அழையுங்கள்; பொலிஸ் அதிகாரங்களை எமக்குத் தாருங்கள். சகல வன்முறைகளையும் நிறுத்திக் காட்டுகின்றோம் என்று கூறியுள்ளேன். நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் தெற்கில் உள்ளவர்கள் தமது உள்ளார்ந்த வெறுப்புக்களைப் பிரதிபலிப்பது வருத்தத்திற்கு உரியது.அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக தென்னிலங்கை அரசியல் களத்தில் தெரிவிக்கப்படும் எதிர்ப்புக்களும், வெறுப்புக்களும் வெறுமனே அவருக்கு எதிரானவை அல்ல. தமிழ் மக்கள் மீது தென்னிலங்கை அரசியல்வாதிகள் மத்தியில் இருக்கும் வெறுப்பும், சந்தேகமும், அச்சமுமே வெளிப்படுகிறது.

தெற்கத்தையவர்களின் நடவடிக்கைகள் அமைச்சர் விஜயகலாவிற்கு எதிரானவை அல்ல. தமிழர் மீதான சந்தேகம், வெறுப்பு, பயம் யாவற்றையூம் பிரதிபலிக்கின்றது. எமது பேச்சுக்களை விமர்சிக்காமல் எங்களுடன் ஒற்றுமையாகப் பேச முன்வாருங்கள். சமஷ்டி அரசியல் அமைப்பொன்றை நிறுவ முன்வாருங்கள் என்று தெற்கத்தைய அரசியல் வாதிகளிடம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன் நாங்கள் எங்கள் உரித்துக்கள் பற்றியோ பாதுகாப்பு பற்றியோ பேசும் போது எம்மைப் பயங்கரவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் அழைப்பதை நிறுத்துமாறு கோருகின்றேன். பிரபாகரன் காலத்தில் எம் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்ற உண்மையைக் கூறுவதால் நாங்கள் எவரும் பயங்கரவாதிகள் ஆகிவிட மாட்டோம். அந்த நாள் இன்று வந்திடாதோ என்று கௌரவ விஜயகலா கூறுவதால் அவர் தீவிரவாதி ஆகிவிட முடியாது.

புலிகள் காலத்தில் எம் மக்கள் (யுத்தத்தில் ஏற்பட்ட பாதிப்புக்களை விட) பொதுவாகப் பாதுகாப்பாக இருந்தார்கள் என்பது உலகறிந்த உண்மை. ஆகவே அமைச்சர் விஜயகலா தனது கடமைகளைத் தொடர்ந்து பணியாற்ற அவரின் கட்சி இடமளிக்க வேண்டும். அவர் தேசியக் கட்சியில் இடம்பெறுவதால் தமிழச்சி என்ற அந்தஸ்தை இழந்தவராகக் கணிக்கக்கூடாது. விஜயகலா அவர்களின் சுதந்திரமும் தனித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.

இதேவேளை சிறிலங்கா அரசாங்கத்தின் சமூக சேவைகள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நேற்றைய தினம் வட மாகாண முதலமைச்சர், விஜயகலா மகேஷவரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தது தொடர்பிலும் முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் வினவினர்.

உண்மையை உணர்ந்த பின்னரே ஒருவரின் வார்த்தைகள் வெளிவர வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். எங்களுக்குப் புனர்வாழ்வளிக்க வேண்டுமா என்று முடிவெடுக்க கௌரவ இரஞ்சன் இராமநாயக்க அவர்களை வடக்கிற்கு கௌரவத்துடனும் அன்புடனும் அழைக்கின்றேன். இரத்தினப்பிரிய பந்து இல்லாதவர்களுக்குக் கொடுத்து அவர்களின் அன்பைப் பெற்றுக் கொண்டார்.

எங்கள் நால்வரிடையில் விஜயகலாவும் சிவாஜிலிங்கமும் நானுமே இல்லாதவர்கள். எமது மக்களுக்குப் பாதுகாப்பில்லை; எமக்கு அதிகாரங்கள் இல்லை; எமது கருத்துக்களுக்கு தெற்கில் இடமில்லைஇ எமக்கு மதிப்பில்லை; புறக்கணிக்கப்படுகின்றோம்; ஆக்கிரமிக்கப்படுகின்றோம். ஆகவே இரத்தினப்பிரிய பந்து போல் எமக்கு வேண்டுவனவற்றை உடனே வழங்க கௌரவ இரஞ்சன் இராமநாயக்க முன்வரவேண்டும்.

எம்மிடம் இல்லாதவற்றை அவரின் அரசாங்கத்தின் ஊடாக எங்களுக்கு வழங்கினால் நாமும் அவர் மேல் அன்பும் மரியாதையும் காட்டுவோம். வடமாகாணம் வந்து நிலைமையைப் பார்த்துச் செல்ல கௌரவ பிரதி அமைச்சரை அன்புடன் அழைக்கின்றேன். இங்கு வந்து இராணுவத்தினரிடமோ பொலிசாரிடமோ தனது கட்சிக்காரரிடமோ உண்மையைக் கேட்பதில் பயன் இல்லை. பொதுமக்களிடம் கேட்கட்டும். அவர்கள் சொல்வார்கள் யாருக்குப் புனர்வாழ்வு அளிக்க வேண்டும் என்று” எனப் பதிலளித்தார்.
Read More

ஆபத்துகளை அள்ளித் தரும் செல்போன் கேம்ஸ்

நாம் அளவறிந்து செல்போன் கேம்சை விளையாடினால், அது பொழுதுபோக்குக்கானதாக இருக்கும். மாறாக, செல்போன் கேம்சுக்கு அடிமையானால் நம்மை அறியாமல் நாமே நம் நிம்மதியை தொலைக்க நேரிடும்.வித, விதமான ஸ்மார்ட்போன்கள் வருகையால் உலகமே உள்ளங்கைக்குள் அடங்கிவிட்டது. தற்கால மனிதர்களின் சிறந்த நண்பனாக விளங்குவது செல்போன்தான். அதனுடன் மனிதன் செலவிடும் நேரம் முன்பை விட பன்மடங்கு அதிகரித்துவிட்டது.

படுக்கையில் கூட செல்போன் பக்கத்திலேயே இருக்கிறது. தூங்குவதும், துயில் எழுவதும் செல்போனை பார்த்துவிட்டு தான் நடக்கிறது. அந்த அளவுக்கு செல்போன்கள் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்குகின்றன.

அத்தியாவசிய தேவைக்காக மட்டுமின்றி பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும் செல்போன்களை இன்றைக்கு அதிகமாக சார்ந்திருக்கிறோம். திரைப்படங்கள், நாடகங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை பார்க்க தொலைக்காட்சியை போல செல்போன்களை பயன்படுத்த தொடங்கிவிட்டோம்.

அந்த வகையில், நம்மில் பலரும் செல்போன் கேம்ஸ் விளையாட நீண்ட நேரத்தை செலவிடுகிறார்கள். தூங்கும் நேரம், பணியில் இருக்கும் நேரத்தை கூட செல்போன் கேம்ஸ் களவாடிவிடுகிறது. இதனால் ஏற்படும் விபரீதத்தை பலரும் உணர்வதில்லை.

காரணம், ஸ்மார்ட்போன் கேம்ஸ் விளையாடுவது இயல்பான செயல் என்று நம்புகிறோம். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்னவென்றால் நீண்ட நேரம் கேம்ஸ் விளையாடுவதால் மன அழுத்தம் ஏற்படுவதோடு, சோம்பலும் அதிகமாகிறதாம்.

நம் எண்ணத்தை வெளிப்படுத்துவது என்பது மனிதன் நிம்மதிக்கு அடிப்படையான விஷயம். நீண்ட நேரம் கேம்ஸ் விளையாடுவதால் நமது எண்ண வெளிப்பாடுகள் மற்றும் உரையாடல்கள் குறைகின்றன. இது நம்மை ஆழ்ந்த அழுத்தத்துக்கு கொண்டு செல்கிறது.

அதுமட்டுமின்றி, இந்த பழக்கம் ஒருவித போதை என்பது பல ஆராய்ச்சியாளர்களின் கண்டு பிடிப்பு. அதாவது, ஒரு நாளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கேம்ஸ் விளையாடுபவர்கள் அந்த போதைக்கு அடிமையானவர்களாக கருதப்படுகிறார்கள்.

‘கூகுள் பிளே ஸ்டோர்’ நமக்கு ஆயிரத்துக்கும் அதிகமான இலவச விளையாட்டுகளை தருகிறது. குழந்தைகளில் இருந்து முதியவர்கள் வரை தங்களுக்கு பிடித்தமான கேம்சை தேர்வு செய்து விளையாடுகின்றனர். நீண்ட நேர செல்போன் விளையாட்டுக்கு அடிமையானவர்கள் மீண்டு வருவது எளிதான காரியமல்ல.

நீண்ட நேரம் கேம்ஸ் விளையாடுவதால் உடல் ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். கேம்ஸ் விளையாடும்போது வெவ்வேறு உடல் தோரணைகள் கொண்டு விளையாடுவது வழக்கம். இது நமது கண், காது, கை போன்ற உறுப்புகளையும், மனித உடல் செயல்பாட்டின் தூண்களாக விளங்கும் முதுகு எலும்பையும், நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது.அதாவது, செல்போன் கேம்ஸ் விளையாடும்போது, இருக்கையில் அமர்ந்து, முதுகெலும்பை 90 டிகிரி நேரான கோட்டில் வைத்து, தலையை மிகவும் குனியாமல், கைகளை ஒரே கோணத்தில் வைத்து, 10 முதல் 20 நிமிடங்கள் விளையாடினால் அது விளையாட்டாக அமையும். அதே சமயம், படுக்கையில் படுத்துக்கொண்டு அல்லது ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து விளையாடினால் அது கண்டிப்பாக உடலுக்கு பல பாதிப்புகளை கொண்டுவந்து சேர்க்கும்.

விளையாடுபவர்கள் பெரும்பாலும் தன்னையும், தன் சூழலையும் மறக்கின்றனர். இது அவர்களின் சுற்றுச்சூழலை மாற்றியமைக்கிறது. ஒரு மனிதன் நீண்ட நேரம் ஓரிடத்தில் அல்லது ஒரு அறையில் சுவாசித்துக் கொண்டு இருப்பதால், சுற்றுச்சூழல் தரும் மாசற்ற மற்றும் சுகாதார சூழல் அவருக்கு அங்கு கிடைக்காமல் போகிறது.

மனிதன் சுத்தமான நீர் மற்றும் உணவை உட்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதைவிட மிக முக்கியம் நாம் சுவாசிக்கும் காற்று. நாம் ஒரே இடத்தில் நீண்ட நேரம் இருப்பதால், நமக்கு ஆக்சிஜன் குறைவாகவும், மாசடைந்தும் கிடைக்க நேர்கிறது.

ஏற்கனவே மனிதன் 6-ல் இருந்து 8 மணி நேரம் உறங்குவதால் அவனுக்கு நல்ல ஆக்சிஜன் கிடைப்பதில்லை. அதுமட்டுமின்றி பள்ளிக்கூடங்கள் மற்றும் அலுவலகங்களும் தங்கள் பங்குக்கு மனிதனை சிறைபிடிக்கின்றன.

மீதமுள்ள நேரத்திலாவது நாம் இயற்கையான சுற்றுச்சூழலுக்கு மதிப்பளிக்க வேண்டும். இதை மறந்து ஸ்மார்ட்போன் கேம்ஸ் போன்றவற்றில் மூழ்கிவிடுகிறோம். இது நமக்கு மட்டுமின்றி நம் சூழலுக்கும் கேடு விளைவிக்கிறது.

தூக்கமின்மைை-யும் முக்கிய பிரச்சினையாக உருவெடுக்கிறது. ஆரோக்கியமான வாழ்வுக்கு நல்ல தூக்கம் இன்றியமையாதது. நீண்ட நேரம் கண் விழித்து கேம்ஸ் விளையாடுவதால், நம் மூளை இயல்பான செயல்பாட்டுக்கு திரும்ப சில மணி நேரம் ஆகிறது. இரவில் கேம்ஸ் விளையாடுவது, நமது தூக்கத்தின் இயல்பை பெரிதும் பாதிக்கிறது.

கேம்ஸ் விளையாடுவதை நிறுத்திய பிறகும், நாம் அதன் ஒலி ஓட்டத்திலே உறங்குகிறோம். இது நமக்கு சிறப்பான தூக்கத்தை அளிப்பதில்லை. இந்த நிலை நீடித்தால் ‘இன்சோம்னியா’ போன்ற தூக்கமின்மை பிரச்சினைகளுக்கு நாம் தள்ளப்படுவோம்.

கேம்ஸ் விளையாடும் சிலர் தங்களது தூக்கத்தில் கூட விளையாடுவது போல் கனவு காண நேரிடும். எனவே, இரவில் உறங்க செல்லும் முன்பு கேம்ஸ் விளையாடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

ஒரு பக்கம் பலவகையான கதிர்வீச்சுக்களை எதிர்கொள்ளும் நாம், நமது ஸ்மார்ட்போன் தரும் ஆபத்தான கதிர்வீச்சை உணர மறுக்கிறோம். பெரிதளவில் ஆய்வுகள் இல்லாத போதிலும், பல தன்னலமற்ற அமைப்புகள், ஸ்மார்ட்போன் மூலம் வரும் எலக்ட்ரோ மேக்னடிக் கதிர்வீச்சை குறைக்க பரிந்துரைத்து வருகின்றன.

ஸ்மார்ட்போன் விளையாட்டுகளுக்கு அடிமையாவதால், அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்புகளை உணராமலேயே, அவற்றை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். மனம், உடல், சமுதாயம், படிப்பு, வேலை, வருமானம் போன்ற மனிதனின் அனைத்து செயல்பாடுகளுக்கும் இது ஒரு முட்டுக்கட்டையாக இருக்கிறது.

எனவே, நாம் அளவறிந்து செல்போன் கேம்சை விளையாடினால், அது பொழுதுபோக்குக்கானதாக இருக்கும். மாறாக, ஆபத்துகளை அள்ளித் தரும் செல்போன் கேம்சுக்கு அடிமையானால் நம்மை அறியாமல் நாமே நம் நிம்மதியை தொலைக்க நேரிடும்.

உதவி பேராசிரியர் டாக்டர் ஜனார்த்தனன்
Read More

பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி’! – பிபிசி ஆனந்தி

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, பிபிசியின் சார்பில் முதன் முதலாக சந்தித்து நேர்காணல் செய்ய மூத்த ஊடகவியலாளர் ஆனந்தி சூரியப்பிரகாசத்துடனான நேர்காணல் ஒன்றை இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

லண்டனிலிருந்து கொழும்பு சென்றதுமே இலங்கை அரசின் கெடுபிடி ஆரம்பித்து விட்டது. எனது பயணத்திட்டம் என்ன, பயணத்தின் நோக்கம் என்ன என்பது பற்றி எல்லாம் துருவித்துருவி விசாரிக்க ஆரம்பித்தார்கள். என்னைத் தொடர்ந்து கண்காணிக்கவும் செய்தார்கள். அப்போது கிட்டதட்ட வவுனியாவுக்கு முன் வரை மட்டுமே இலங்கை படைகளின் ஆதிக்கம் இருக்கும். அதுவரை சென்றேன். அதன் பிறகு புலிகளின் ஆதிக்கப்பகுதி. அதற்குள் வருவதற்குள் பல்வேறு தடைகள். அதையெல்லாம் மீறி புலிகள் ஆதிக்கப்பகுதிக்கு வந்தேன். பிறகு யாழ்ப்பாணம் சென்றேன். அங்குதான் அப்போது பிரபாகரன் இருந்தார்.

யாழ்ப்பானத்தில் அப்போது ஞானம் என்ற ஒரே ஒரு உணவு விடுதிதான் இருந்தது. அங்கே அறை எடுத்தேன். குளித்து முடித்து, புலிகளுக்க தகவல் சொல்லலாம் என்பது எனது திட்டம். நான் குளித்து வருவதற்கும், கதவு தட்டப்படுவதற்கும் சரியாக இருந்தது.

திறந்தால், சுப. தமிழ்ச்செல்வன் உட்பட சில புலிகள் நிற்கிறார்கள். என்னைக்குறித்து விசாரிக்கிறார்கள். நான் ஆச்சரிப்பட்டுப் போனேன். நான் வந்த தகவல் அதற்குள் அவர்களுக்கு சென்றுவிட்டது.

இதிலிருந்து ஒரு விடயத்தை என்னால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. ஈழ மக்கள், புலிகளின் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர். புதிதாக ஒருவர் வந்தால், புலிகளுக்கு தகவல் தெரிவித்து விடுவார்கள்.

பிரபாகரனுடனான சந்திப்பு எப்படி இருந்தது?

பிரபாகரனை அவரது வீட்டில் வைத்து சந்திக்கச் சென்றேன். வாசலுக்கே வந்து அன்போடு வரவேற்றார். பலரும் நினைப்போது போல அவர் எப்போதுமே சீரியஸ் ஆன பேர்வழியாக இருப்பதில்லை. சகஜமாக பழகுவார். சில முறை நான் ஜோக் அடித்த போது கூட ரசித்து சிரித்தார். தானே எனக்கு நண்டு, இறால் என கடல் உணவுகளை சமைத்துக்கொடுத்தார். மிக அன்பான மனுசர் அவர்.

தனக்கு எதிராக வைக்கப்படும் கேள்விகளை அவர் எப்படி எதிர்கொண்டார்?

விமர்சனங்களை அவர் வரவேற்றார். சந்திரிகா- புலிகள் குறுகிய கால சமாதானப் பேச்சுக் காலத்திலும் வன்னிக்குச் சென்று பிரபாகரனை சந்தித்தேன். அவரிடம் சில கேள்விகள் கேட்கணும் என்றுதான் நானும் போனேன். ஆனால், அங்கு அவர் கட்டி வைத்திருந்த “செஞ்சோலை குழந்தைகள் இல்லத்தைப் பார்த்த பிறகு எனக்குள்ளேயே என்னையுமறியாத ஒரு மாற்றம் ஏற்பட்டது.

தாய் தந்தையரை உறவுகளை இழந்த குழந்தைகளுக்காக எத்தனை அக்கறையுடன் அந்த இல்லதைப் பிரபாகரன் அமைத்திருந்தார்! நெஞ்சு முழுக்க ஈரம் உள்ள மனுசனால் மட்டுமே அப்படி அமைக்க முடியும்!

அந்த செஞ்சோலை இல்லத்தை கண்டபோதே, என் மனதில் இருந்த கசடுகள் எல்லாம் கழுவப்பட்டு புதிதாக பிறந்த உணர்வு ஏற்பட்டது. வன்னியிலிருந்து திரும்பியதும், பி.பி.சியில் செஞ்சோலை பற்றிய நிகழ்ச்சி தயாரித்து “என் தெய்வம் வாழும் திருக்கோயில் நின்றேன்’ என்றுதான் தலைப்பிட்டேன்.

பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி. என்ன வசீகரமென்றே எனக்கு விளங்கவில்லை. நேரில் சந்தித்தபோது இவரா இத்தனை பெரிய போராளி அமைப்பின் தலைவர்.. குழந்தை முகமாக இருக்கிறாரே என்றுதான் தோன்றும்.

அவரை சந்தித்தபோது, “உங்கள் போராட்டத்தில் எத்தனை மக்களுக்கு, குழந்தைகளுக்கு கஷ்டம்” என்றுகூட கேட்க நினைத்தேன். ஆனால் அவரைப் பார்க்கும் போது அந்த கேள்வியே எழவில்லை.

சரி, புலிகளின் ஆதிக்கத்தில் ஈழம் இருந்தபோது சர்வாதிகாரம் நிலவியதாக ஒரு விமர்சனம் உண்டு!

உண்மை அதுவல்ல. போராளிகளுக்கும் மக்களுக்கும் இடையேயான ஆழமான அன்பு, உறவு இருந்தது. மக்கள் தலைமை மீது கொண்டிருக்கும் நம்பிக்கையும் மிக உறுதியானது. அங்குள்ளவர்களிடம் பேசியபோது ஒரு தகவல் கிடைத்தது.

எப்போதாவது உணர்ச்சி வசப்பட்டு போராளிகள் பொதுமக்களை அடித்தால் கூட “தலைவர் உங்களை இப்படி அடிக்கச் சொல்லித் தந்தவரோ?’ என்றுதான் கேட்பார்கள். அந்தளவுக்கு தலைமை மீது மக்களுக்கு நம்பிக்கை உண்டு.

அது மட்டுமல்ல.. போராளியாக இருப்பவர் தனது ஆயுதங்களைத் தவறாகப் பயன்படுத்தினால் உடனடியாக அமைப்பிலிருந்து நீக்கப்படுவார். அதோடு, அவர் தமிழீழ சிவில் நிர்வாக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார். சிவில் சட்டங்களின் படி அவருக்குத் தண்டனை வழங்கப்படும்.

பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர்., இந்திரா ஆகியோரிடம் மிகுந்த மரியாதை உண்டு என்று சொல்லப்படுவது உண்டு!

ஆமாம்.. எம்.ஜி.ஆர். மீது மிகுந்த பற்று வைத்திருந்தவர் பிரபாகரன். ஈழ மக்கள் அனைவருமே அப்படித்தான். எம்.ஜி.ஆர். இறந்தபோது, ஈழமக்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது. அதே போல இந்திராகாந்தி மறைந்த போதும் ஈழமக்கள் மிகுந்த துயர் அடைந்தார்கள்.

உங்களது ஈழப்பயணங்களின் போது வியக்க வைத்தது எது?

பல விடயங்களைச் சொல்லலாம். முக்கியமாக நான் ஈழ மக்களிடம் கேட்க விரும்பியது, சந்திரிகாவின் ஐந்தாண்டு கால தொடர் போர் மற்றும் கடுமையான பொருளாதாரத் தடையிலிருந்து எப்படி 5 லட்சம் மக்களை புலிகள் காப்பாற்றினார்கள் என்பதைத்தான்.

அதற்கு அம்மக்கள் கொடுத்த விடை நெகிழ்வூட்டியது. “ இப்படிப்பட்ட சூழலை தலைவர் பிரபாகரன் முன்னதாகவே அனுமானித்தார். தனக்கு அடுத்தபடியாக இருந்த இயக்க தலைவர்களை அழைத்தார். அப்போது அவர் முதலில் பேசியது மக்களுக்கான உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு பற்றித்தான். அதன்படி எங்கள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் விவசாயம் செய்யத் தகுதியுள்ள நிலங்களையெல்லாம் கவனத்துடன் கணக்கெடுத்தோம். பணப்பயிர்களைத் தடை செய்தோம். விதை நெல்கள் சேமித்தோம். இயற்கை விவசாயத்துக்கு பழகினோம். மேலும், எமது ஐந்து லட்சம் மக்களுக்கும் தேவையான வைட்டமின், புரதச் சத்து தேவைகளுக்கேற்றபடி பிற காய்கறி வகை களையும் விவசாயம் செய்ய வைத்தோம். இப்ப டித்தான் சந்திரிகாவின் கொடுமை யான பொருளாதாரத் தடையினை வெற்றி கண்டோம்” என்றனர்.

புலிகளை ஏதோ வன்முறையாளர் என்றே உருவகம் கொடுத்திருக்கும் பெரும்பாலான ஊடகங்களுக்கு இது  தெரியாது. புலிகள், விவசாயம், அமைப்பு நிர்வாகம், கலை- பண்பாடு, நீர்வள மேலாண்மை என்று பல்வேறு துறைகளில் திட்டமிட்டு அரசாகவே இயங்கினர் என்பதே உண்மை.
Read More

தூத்துக்குடி படுகொலையினை ஐ.நாவில் பதிவு செய்த மே பதினேழு

இந்திய அரசு தமிழ்நாட்டில் தூத்துக்குடி மக்களின் மீது ஒரு வன்முறையினை ஏவிவிட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்தின் கார்ப்பரேட் நிறுவனமான வேதாந்தா ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் போராடி வருகிறார்கள். இந்த பெரிய அபாயகரமான ஆலையானது மன்னார் வளைகுடாவிற்கு 15 கி.மீ சுற்றளவிற்கு உள்ளாக உள்ளது. அந்த ஆலையைச் சுற்றி 7 கி.மீக்கு உள்ளாக 2,50,000 மக்கள் வசிக்கிறார்கள். அந்த ஆலை வெளிப்படுத்தும் நச்சுக்கள் தூத்துக்குடியை சுற்றியுள்ள 7,00,000 மக்களுக்கு பாதிப்பினை உண்டாக்குகிறது. 2018 இல் அந்த ஆலை விரிவாக்கத்திற்கு முன்வைக்கப்பட்ட போது மக்கள் மீண்டும் போராட ஆரம்பித்தனர். போராட்டத்தின் 100வது நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைதியாக போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச் சூட்டினை காவல்துறை நிகழ்த்தியுள்ளது. 17 வயது பள்ளி சிறுமி ஸ்நோலின் உட்பட 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்ட அப்பாவி போராட்டக்காரர்கள் படுகாயமடைந்துள்ளனர். சீருடையில் இல்லாத நபர்கள் போராட்டக்காரர்களை நோக்கி அவர்களின் உயிரைப் பறிக்கும் நோக்குடன் சுட்டதற்கான காணொளிகள் வெளியாகியுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்ட பலர் அருகிலிருந்து சுடப்பட்டுள்ளனர். காவல்துறை வீடுவீடாக சென்று இளைஞர்களை சட்டத்திற்கு புறம்பாக கைது செய்து வருகிறது. தற்போது வரை இப்படியான தேடுதல்களும், கைதுகளும் நடைபெற்று வருகின்றன. துப்பாக்கி சூடு நடத்துவதற்கான உத்தரவை அளித்ததற்கு இதுவரை எந்த அதிகாரிகளும் பொறுப்பேற்கவில்லை. ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது வரை படுகொலையை நிகழ்த்தியதற்கான பொறுப்பேற்றல் நிகழவில்லை. தூத்துக்குடியின் தற்போதைய நிலையினை கருத்தில் கொண்டு, மனித உரிமை மீறல்களும், காவல்துறை ஒடுக்குமுறைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்பதை இந்த ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
Read More

ஓ நீங்கள் யாழ்ப்பாணமா

மகிழ்த்திடுங்கள் எங்களிற்கு உங்கள் ஆதரவு தாருங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
Read More

தமிழர்களை அழிக்க பிரித்தானியா செய்த உதவிகள்!

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு முக்கிய பங்காற்றிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உள்ளிட்ட ஆயுதம் ஏந்திய அனைத்து இயக்கங்களையும் முற்றாக அழிப்பதற்கு பிரித்தானியா ஸ்ரீலங்காவிற்கு 80 களில் இருந்தே ஆதரவு வழங்கி வந்துள்ளதாக பிரித்தானியாவின் முன்னணி புலனாய்வுச் செய்தியாளரான பில் மிலர் தெரிவித்துள்ளார். அதேபோன்று இறுதியுத்த காலப்பகுதியில் ஏராளமான நவீன ஆயுதங்கள், செய்மதி புகைப்படங்கள், தொழில்நுட்ப எதவிகள் என்று தமிழ் மக்கள் மீதான இன அழிப்பொன்றை மேற்கொள்வதற்கான அனைத்து உதவிகளையும் பிரித்தானியா செய்துள்ளதாக ஐ.நாவின் முன்னைநாள் உதவிச் செயலாளர் Denis Halliday தெரிவித்திருந்தார். தமிழின அழிப்பிற்கு பிரித்தானியா செய்த உதவிகள் பற்றிய பல ஆதாரங்களைச் சுமந்துவருகின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:
Read More

வெல்லப்பட வேண்டிய சாத்தானின் ஆவிகள்

இன்றைய தமிழ்நாட்டை குறிவைத்து நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஆவிக்குரிய பின்னணியில் அதை எப்படி ஜெயிக்க வேண்டும்
Read More

விடுதலைப் புலிகளின் கொள்கையினை தோற்கடிக்க முடியவில்லை

பௌதீக ரீதியில் நாம் பயங்கரவாதிகளை தோற்கடிக்க முடிந்த போதிலும் அவர்களின் கொள்கையினை தோற்கடிப்பதற்கு இன்னும் முடியாதுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற, சிறப்பு கூட்டத்தொடரில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை நிகழ்த்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “கடந்த மூன்றரை வருடங்களாக சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பை பெற்று விடுதலைப் புலிகளின் அந்தக் கொள்கையினை தோல்வியுறச் செய்வதற்கு நான் முயற்சித்தேன். எனினும் யுத்தத்தின் பின்னரான நிலைமைகளை கையாள்வது என்பது மிகுந்த சவாலாகும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்ற சமயம் அச்சவாலுக்கான விடைதேடும் பணி ஏழு வருடங்களால் தாமதமாகி இருந்ததனால் அவை மேலும் இக்கட்டான சூழ்நிலைக்கு உள்ளாகியிருந்தது.

மூன்று தசாப்தங்களாக சமூகத்தில் வேரூன்றியிருந்த போர் மனநிலையினை அகற்றி சகவாழ்வினை ஏற்படுத்துவதற்கு இன்னும் எம்மால் பாரிய வேலைகளை செய்ய வேண்டி இருக்கின்றது. ஒரு அரசாங்கத்தினால் மாத்திரம் அதனை செய்வது கடினமாகும். அதற்கு சமூகத்தின் அனைத்து தரப்புகளினதும் நேரடிப் பங்களிப்பு கட்டாயமாகத் தேவைப்படுகின்றது. அதனால் அந்த நோக்கை அடைவதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவோமென அனைத்து தரப்புகளுக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

நாட்டின் நிலையான அடித்தளம் தேசிய நல்லிணக்கமே ஆகும். உண்மையான தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்மானங்களை இயற்றத்தக்க கட்டமைப்பினை அறிமுகப்படுத்த வேண்டும். >அந்த நோக்கை வெற்றிகொள்வதற்கு தற்போது செயலில் இருந்துவரும் மாகாண சபை முறைமையை மேலும் பலப்படுத்துவது காலத்தின் தேவையாகும் என நம்புகிறேன். அத்துடன் எவ்வாறான விமர்சனங்கள் எழுந்த போதிலும் வடக்கு கிழக்கு மக்களின் மனங்களை வெல்லவேண்டுமாயின் மக்களின் விருப்பத்தையும், இணக்கப்பாட்டையும் பெற்ற அரசியல் வேலைத்திட்டமொன்றினை ஆரம்பித்தல் வேண்டும்” என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Read More

ஜெருசலேம் 12 மணித்தியாலம் உபவாச செபம்

ஜெருசலேம் 12 மணித்தியாலம் உபவாச செபம் ஜெருசலேம் எழுப்புதல் மற்றும் இந்தியாவில் நடக்கும் இன்றைய பிரச்சனைகளிற்கு காரணம் என்ன?

Read More

இந்தியாவில் பெண்களை மட்டுமே குறிவைத்து தாக்குவது ஏன் ?


பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை ஏன்  இந்தியாவில் பெண்களை மட்டுமே குறிவைத்து தாக்குவது ஏன் ?
Read More

தேவனை ஆராதிக்க அனுமதி தேவையில்லை

தேவனை ஆராதிக்க அனுமதி தேவையில்லை

Read More

தண்டிக்கப்படாதவரை தாக்குதல்கள் தொடரும்!

தமிழர்கள் மீது நடந்தேறிய படுகொலைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் பொறுப்புக்கூற வேண்டிய அரசும், குற்றவாளிகளும் தண்டிக்கப்படாதவரை, இலங்கைத்தீவில் சிங்களவர்கள் அல்லாத மற்ற இனத்தவர்கள் மீதான வன்முறைகள் தடுக்க முடியாத ஒன்றாக இருக்கும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.மனித உரிமைச்சபைக் கூட்டத்தொடருக்காக ஜெனீவா சென்றுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், முன்னராக மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகளின் தொடர்ச்சியே தற்போதைய மைத்திரி ரணில் கூட்டாட்சியிலும் இடம்பெறுகின்றன. இது ஆட்சிகளைக்கடந்து சிங்கள பேரினவாதத்தின் கோர முகத்தினை வெளிக்காட்டுகின்றது.

ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடர் இடம்பெறுகின்ற காலங்களில், இவ்வாறு முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்ற சம்பவங்கள், நிலைமைகளை திசை திருப்புகின்ற அரசின் செயல் என்பதற்கு அப்பால் இது அரசுக்கு அனைத்துலக அரங்கில் அழுத்தங்களை கொடுத்திருப்பதனையே அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இவற்றையெல்லாம் ஐ.நா.வின் கவனத்திற்கு கொண்டுவரும் பொருட்டு, ஐ.நா மனித உரிமை சபையின் ஆணையாளர் அலுவலகத்தோடு சந்திப்புக்களை நடாத்தியிருந்தோம்.

அச்சந்திப்புக்களின் போது, தமிழர் ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதமாகச் சித்தரித்து அதனை இலங்கை அரசாங்கம் அழித்தது. அதன்போதும் மனித உரிமைகள் சார்ந்த விடயங்களில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை பொறுப்புடன் நடக்கவில்லை. இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட தமிழருக்கு நியாயம் வழங்கும் வகையில் அமைந்திருக்கவில்லை.

தமிழ் மக்களுக்கு எதிரான யுத்த காலத்தில் சிங்கள அரசிற்கு சார்பாகவோ அல்லது நடுநிலையாகவோ இருந்த முஸ்லிம் மக்கள் இன்று இலங்கை அரசினால் குறிவைக்கப்பட்டுள்ளனர். தமிழர்களுக்கு தேசம் என்கின்ற நிலப்பரப்பு இருந்ததால் அவர்களை அழித்த இலங்கை அரசு தேசம் என்கின்ற நிலப்பரப்பு இல்லாத முஸ்லிம் மக்களின் பலமாக திகழ்கின்ற அவர்களது பொருளாதாரத்தை தற்போது சிதைத்து வருகின்றது.

இதன் வெளிப்பாடே அண்மையில் கண்டியில் இடம்பெற்ற கலவரங்கள். இலங்கை அரசாங்கம் தன்னைத் தட்டிக்கேட்க ஆள் இல்லை. தான் எதுவும் செய்யலாம் என்ற தோரணையிலேயே செயற்பட்டு வருகின்றது. இது பொறுப்புக்கூறலில் இருந்து இலங்கை அரசாங்கத்தை விடுவித்ததால் ஏற்பட்டவிளைவே.

எனவே தான் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் எதிர்வரும் 21 ஆம் திகதி இலங்கை தொடர்பில் உரையாற்றும்போது இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நியாயாதிக்கத்தை அளிக்கும் தீர்மானத்தை அல்லது விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்கும் தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம்வகிக்கும் உறுப்புநாடுகளிடம் வலியுறுத்த வேண்டும் என கோருகின்றோம் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

Read More

சாகர்மாலா ஒரு பேரழிவுக்கான திட்டம்?

ஒரு பேரழிவுக்கான திட்டம்? சாகர் மாலா திட்டத்தின் ஆபத்தை மக்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டு!
Read More

INDIA சரியான பதிலடி | யாருக்கு? ஏன்? எதற்காக? |

சரியான பதிலடி | யாருக்கு? ஏன்? எதற்காக? |

Read More

TTV தினகரனின் அதிரடி அறிக்கை

எந்த ஊடகமும் வெளியிடாத அதிரடி அறிக்கை | TTV தினகரனின் இவ்வறிக்கையில் அப்படி என்ன இருக்கிறது?

Read More

தமிழ் நாட்டு மக்களை அழிக்க இந்திய அரசின் சதி

தமிழ் நாட்டு மக்களை அழிக்க இந்திய அரசின் சதி 
Read More

பைதகரஸ் தேற்றத்தை கண்டுபிடிக்க உதவிய தமிழர்கள்

பைதகரஸ் தேற்றத்தை கண்டுபிடிக்க உதவிய தமிழர்கள்

Read More

யாரெல்லாம் தமிழன்

நிராஜ் டோவிட் அவர்களே...தமிழர்கள் அனைவரும் இனைந்து தமிழ் (ம)ஆங்கிலம் ஆகிய இரு மொமிகளிலும் தமிழர் நலன் கருதி நம்பகமான செய்தி ஊடகத்தை நிறுவ வேண்டும்... ஏனெனில் தற்போது உள்ள அனைத்து ஆங்கில ஊடகங்கள் உன்மையை மறைத்து பொய் செய்தி கூறி வருகின்றனர்...நிங்கள் ஏதாவது சொய்தால் நாளைய தமிழ் மக்கள் ஒன்று படுவர்....தமிழர்களுக்கொன்று ஒரு நம்பகமான ஆங்கில செய்தி சேனல் வோண்டும்... அபோதுதான் உலகின் கவனத்திற்கு கொண்டு உண்மையை உரக்க சொல்ல வேண்டும்
Read More

இலங்கை போர் திரும்ப வருமா ?


இலங்கை போர் திரும்ப வருமா ?

Read More

தமிழின அழிப்பில் முஸ்லிம்களின் முக்கிய பங்கு

2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளை அழிக்க எங்களுக்கு நிறைய உதவிகளை முஸ்லீம்கள் செய்தார்கள். அவர்கள் தமிழ் பேச வல்லவர்கள் என்பதனால் புலிகளின் இடங்களுக்குள் ஆள ஊடுருவி, எல்லா தகவல்களையும் எங்களுக்கு தந்தார்கள். மக்களோடு மக்களாக கலந்து எமக்கு புலனாய்வு தகவலை தந்ததும் அவர்களே....முஸ்லிம் மக்கள் இல்லாவிடின் இந்த நாட்டில் யுத்தத்தை முடித்திருக்க முடியாது. முஸ்லிம் மக்கள் எமக்கு வழங்கிய உளவுத்துறை சார்ந்த மிகப்பெரிய ஒத்துழைப்பின் காரணமாகவே எம்மால் யுத்தத்தை வெற்றிகொள்ள முடிந்தது. எனவே அவர்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து நான் கவலையடைகின்றேன் என்று கூட்டுப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவிந்திர விஜயகுணவர்த்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘இது இனவாத வன்முறையாகும். யுத்தமல்ல. எனவே எமது அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும். தற்போது அவசரகால நிலையின் கீழ் இந்த விடயத்தில் தலையிட எமக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் கீழ் நாங்கள் குறைந்தபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் நடவடிக்கையை மேற்கொண்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்போம்.

தற்போது இராணுவத்தினர் அனைத்துப்பகுதிகளிலும் களமிறக்கப்பட்டுள்ளனர். எனவே நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் ஒருவிடயத்தை கூற வேண்டும். இன்று நாம் உயிரோடு இருப்பதற்கு காரணம், யுத்தத்தின்போது முஸ்லிம் மக்கள் உயிர்த்தியாகத்துடன் எமக்கு வழங்கிய ஒத்துழைப்பினால் யுத்தத்தை முடித்தோம். முஸ்லிம் மக்களின் மொழி அறிவு எமக்கு பாரிய ஒத்துழைப்பாக இருந்தது. இன்று வீதிகளில் குண்டு வெடிக்காமல் இருப்பதற்கு முஸ்லிம் மக்களே காரணம். எனவே அவர்களின் நிலைமை தொடர்பில் நான் கவலையடைகிறேன். நாங்கள் குறைந்த பட்ச அதிகாரத்தைப்பயன்படுத்தி தேவையான நடவடிக்கை எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.
Read More

மாண்டே போனார் ஊடக உலகில் -அதிரும் ரிப்போர்ட்

தந்தி டிவியின் தலைமை செய்தி ஆசிரியராக இருந்து வந்த ரங்கராஜ் பாண்டேவை வேலையை ராஜினாமா செய்யுமாறு தந்தி டிவி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. லஞ்சப் புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  ஒரு சில மாதங்களுக்கு முன்னதாக, பாண்டே, எடப்பாடி பழனிச்சாமியை அணுகி, அரசு மற்றும் முதல்வர் செய்திகளுக்கு நல்ல கவரேஜ் கொடுப்பதாகவும்,  மற்ற கட்சிகள் இதே போல மீடியாவை கண்காணிக்க தனித் தனியாக ஆட்களை நியமித்திருப்பதாகவும் பேசியுள்ளார். எடப்பாடி பெரிய அளவில் பிடி கொடுக்கவில்லை.

மதுரையின் முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பாவின் மகன் தலைமையில், ஊடகங்களை கண்காணித்து, எந்த சேனல், அரசுக்கு ஆதரவாக உள்ளது, எதில் செய்திகள் குறைவாக வருகின்றன என்பதை கண்காணித்து,  அரசு கேபிளில் இருந்து ஒளிபரப்பை நிறுத்தி விடுவோம் என்ற ஆயுதத்தை வைத்து மிரட்டும் பணியை செய்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.  இந்த நிலையில்தான் முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல் மற்றும் தங்கதமிழ்ச் செல்வன், ஆகியோர், எடப்பாடி பழனிச்சாமி, எஸ்பி.வேலுமணி உள்ளிட்டோர் மீது ஊழல் புகாரை வெளியிட்டனர்.  இந்த செய்தியை போடக் கூடாது என்று எடப்பாடி தரப்பில் இருந்து நேரடியாகவே தந்தி நிர்வாகத்திடம் சொல்லப்பட்டது.   அது பாண்டேவிடமும் தெரிவிக்கப்பட்டது.  இரவு 7.30 மணி செய்தியில் அந்த செய்தி வெளியிடப்படவில்லை.   ஆனால் 8 மணி செய்தியில் அந்த செய்தி விரிவாக வெளியிடப்பட்டது.  

கோபத்தின் உச்சத்துக்கே சென்றார் எடப்பாடி.   தனது மீடியா செல்லை அழைத்து, தந்தி டிவியில் டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குறித்த செய்திகள் எப்படியெல்லாம் முக்கியத்துவம் அளித்து ஒளிபரப்பப்பட்டன என்பது குறித்து அறிக்கை பெறுகிறார். இந்த அறிக்கையை தந்தி டிவி நிர்வாகத்துக்கு அனுப்பி, என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்கிறார்.    நிர்வாகம் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, தந்தி டிவி அரசு கேபிளில் இருந்து நீக்கப்படுகிறது.  நான்கு நாட்களுக்கு அரசு கேபிளில் தந்தி டிவி தெரியவில்லை.  எப்போதுமே தந்தி டிவிக்கு ஒரே நிலைபாடுதான்.  குழப்பமேயில்லாமல் எப்போதும் ஒரு கட்சி சார்புதான்.   அந்த ஒரே கட்சி ஆளுங்கட்சிதான். 

அரசு கேபிளில் பிடுங்கப்பட்டதும் பதறிப் போனது நிர்வாகம்.   புல்லட்டின் எடிட்டர் பாஸ்கர் பாபுவை அழைத்து உடனடியாக ராஜினாமா செய்யச் சொன்னது.  பாண்டேவை அழைத்து அவரையும் ராஜினாமா செய்யச் சொன்னது.இத்தனை பெரிய பதவியில் இருந்து விட்டு, பணி நீக்கம் செய்யப்பட்ட தகவல் வெளியே பரவினால் வேறு வேலை கிடைக்காது என்பதால், வெளியே சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார் பாண்டே. எது எப்படியோ, இனி நீங்கள் அலுவலகம் வர வேண்டாம் என்று தெளிவாக கூறி விட்டது நிர்வாகம்.  பாண்டேவின் ஆதரவாளர்கள், அவர் சொந்த வேலையாக வெளிநாடு சென்று விட்டார்.   விடுப்பில் சென்று விட்டார் என்று கதை விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.  ஆனால் பாண்டே பணி நீக்கம் செய்யப்பட்டதுதான் உண்மை. அடுத்ததாக பாண்டே, பெருந்தலைவர் எச்.ராஜா அவர்களின் முகநூல் அட்மினாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More

ஆவி, ஆத்துமா, சரீரம் இது குறித்து வேதம் சொல்வது என்ன?

ஆவி, ஆத்துமா, சரீரம் இது குறித்து வேதம் சொல்வது என்ன? - அணி சபை செய்தி, மகள் ரெபோக்கா, எம் பி ஏ மாணவி. நாள்- 15-2-2018.

பைபிள் காலேஜ் போகவில்லை, பாஸ்டர் மகளுமல்ல, கல்லூரி மாணவி ரெபேக்கா ஒரு ஆழமான சத்தியத்தை ஆவியானவரின் உதவியுடன் போதிப்பதைப் பாருங்கள். 

அணி சபையில் அத்தனை பேருக்கும் ஆவியானவர் வாய்ப்புத் தருகிறார், அத்தனை பேரையும் வைத்து கற்றுக் கொடுக்கிறார் என்பதற்கு மகள் ரெபெக்காவின் செய்தி ஒரு சாட்சியாகும்.

அத்தனைபேரும் கைதட்டி மகள் ரெபேக்காவைப் பாராட்டுவதைப் பாருங்கள். அணிசபை என்பது ஒரு குடும்பம். இதில் அன்பு இருக்கும் பொறாமை கிடையாது.
Read More

முஸ்லீம்களை பிடித்து அடித்துள்ளார்கள்

அம்பாறை மாவட்டத்தில் ஒரு காலத்தில் முஸ்லீம்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள். ஆனால் இன்று அங்கே முஸ்லீம்களை காண்பதே அரிதாகிவிட்டது. காரணம் சிங்களவர்கள் அங்கே குடியேறி. முஸ்லீம்களை ஓரம் கட்டி விட்டார்கள். இன் நிலையில் அங்கே ஒரு சாப்பாட்டு கடை உண்டு. இதனை முஸ்லீம் இனத்தவர் நடத்தி வந்தார். எஞ்சியுள்ள தமிழ் முஸ்லீம்கள் அங்கே சென்று சாப்பிடுவது வழக்கம். நல்ல சுத்தமான பாய் கடை. இதனால் ஆத்திரமடைந்த சிங்கள இளைஞர்கள்.

அதனை அடித்து நொருக்க ரூம் போட்டு திட்டம் போட்டுள்ளார்கள். எப்படி ஆரம்பிப்பது ? எங்கே இருந்து ஆரம்பிப்பது என்று திட்டம் போட்டு 6 பேராகச் சென்று அங்கே பிரியாணி வாங்கி சாப்பிட்டு விட்டு. அதில் ஏதோ மருந்து கலந்திருப்பதாக கூறி. வேலை செய்யும் முஸ்லீம்களை பிடித்து அடித்துள்ளார்கள். தாங்கள் கொண்டு சென்ற ஒருவகை மருந்தை கடையில் இருந்து எடுப்பது போல சினிமா பாணியில் எடுத்து, இது ஆண்களுக்கு ஆண்மையை இழக்கச் செய்யும் மருந்து என்றும். பெண்கள் பாவித்தால் கரு கலையும் என்றும் கூறவே.

ஏன் அடிக்கிறோம் எதற்கு அடிக்கிறோம் என்று தெரியாத அவ்வூர் மோட்டு சிங்களவர்கள், கடையை அடித்து நொருக்கியுள்ளார்கள். ஒரு வழியாக கடையை உடைத்து செயல் இழக்க செய்துவிட்டார்கள். ஆனால் சிங்கள மருத்துவர்கள் சிலர், இப்படியான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவே இல்லை. அதுவும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சேர்ந்து இவ்வாறு செயல்படும் மருத்து இல்லவே இல்லை என்று யூரியூப்பிலும், பேஸ் புக்கிலும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இனி என்ன பிரயோசனம் ?  சிங்களவர்களின் பிறப்பு எண்ணிக்கையை குறைக்கவே முஸ்லீம்கள் இவ்வாறு செய்கிறார்கள் என்று அம்பாறை
சிங்களவர்கள் புதுக் கதையை அளந்து வருகிறார்கள். இதற்குப் பின்னால் மகிந்த கும்பல் உள்ளதாக தகவல்...அதுவே உண்மையும் கூட...
Read More

ராணுவம் ரசாயன குண்டு வீச்சு.. ஈழமக்களுக்கு நேர்ந்த அதே துயரம்

சிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு எதிராக கடந்த 7 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாத அமைப்புகள் அரசு படைக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிரியாவை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

தலைநகர் டமாஸ் குஷின் புறநகரான கிழக்கு கவுட்டா கடந்த 2012-ம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்து வருகிறது. அதை சிரியா ராணுவம் சமீபத்தில் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

இதற்கு ரஷியா உதவி புரிந்து வருகிறது. சிரியா ராணுவத்துடன் ரஷிய போர் விமானங்கள் அதிரடி குண்டு வீச்சு நடத்தின. அதில் பதுங்கு குழிகளுக்குள் முடங்கி கிடந்த 556-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால் அவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் ஆவர்.

எனவே, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் ஐ.நா.வில் போர் நிறுத்த தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினர். அதை தொடர்ந்து சிரியாவில் மனிதாபிமான அடிப்படையில் 30 நாட்கள் போர் நிறுத்தம் செய்வதென முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.

சிரியா முழுவதும் இந்த போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இருந்தும் அதை மீறி கிழக்கு கவுட்டா பகுதியில் சிரியா மற்றும் ரஷியாவின் போர் விமானங்கள் குண்டுகளையும், ராக்கெட்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தின.

அதில் 21 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 7 பேர் குழந்தைகள். அனைவரும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே குண்டு வீச்சில் காயம் அடைந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்த போது கிழக்கு கவுட்டாவில் குளோரின் ரசாயன குண்டு வீசியிருப்பது தெரிய வந்தது. ரஷியா மற்றும் சிரியா ராணுவம் இணைந்து ரசாயன குண்டுகளை வீசியதாக புகார் எழுந்துள்ளது.

ஆனால் இதை ரஷியா மறுத்துள்ளது. ரசாயன குண்டு வீச்சுக்கு சிரியாதான் பொறுப்பு ஏற்க வேண்டும் என ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரவ் வலியுறுத்தியுள்ளார். ஆனால் சிரியாவும் ரசாயன குண்டு வீச்சை மறுத்துள்ளது. இதனால் இந்த விவகாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.

இதற்கிடையே சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் கிழக்கு கவுட்டாவில் தினமும் 5 மணி நேரம் போர் நிறுத்தம் செய்ய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை நிறுத்த வேண்டும்!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை ஐ.நா பாதுகாப்புச்சபை ஆற்றுப்படுத்த வேண்டும் அல்லது குறித்த ஒரு பணிக்காக நியமிக்கப்படும் தீர்ப்பு மன்றம் ஒன்று இலங்கையில் நடந்த சர்வதேச மனித உரிமைகள் மீறல் பற்றி ஆராய நியமிக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறான ஒரு கோரிக்கை எம்மிடையே எழுந்துள்ளதோடு ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தின் செயலாளர் நாயகத்தின் கருத்தும் அவ்வாறான தன்மையில் அமைந்துள்ளதன் அடிப்படையில் அவ்வாறான ஒரு நடவடிக்கை எடுக்க முடியும் என்று தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனது வாராந்த கேள்வி பதில் அறிக்கையிலேயே முதலமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவரது கேள்வி பதில் அறிக்கை வருமாறு, இவ்வாரக் கேள்வி கொழும்பில் இருந்து வந்துள்ளது. கேள்வி பின்வருமாறு.

பத்திரிகையாளர் கேள்வி :- அடுத்த வாரம் ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கட்டத் தொடர் ஆரம்பமாகின்றது. அது பற்றிய உங்கள் கருத்தென்ன?

பதில் :- 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 30/01 என்ற பிரேரணை ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்டது. அதன் கீழ் இலங்கை அரசாங்கத்திற்கு பல கடப்பாடுகள் இருந்தன. அவற்றை நிறைவேற்ற இரண்டு ஆண்டு காலம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவற்றை நிறைவேற்றாமலேயே இலங்கை அரசாங்கம் இருந்து வந்தது.

கடந்த மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பிலான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு இலங்கை அரசாங்கமும் அனுசரணை வழங்கியது. பொறுப்புக்கூறலை உள்ளடக்கிய நிலைமாறுகால நீதிப் பொறிமுறையை உருவாக்குவதற்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் அதன்போது வழங்கப்பட்டது. இலங்கையின் அனுசரணையைப் பெறுவதற்காக மேற்கு நாடுகள் அந்தப் பிரேரணையின் காரத்தை பெருமளவுக்குக் குறைத்தன என்பது உங்களுக்குத் தெரியும். சர்வதேச சமூகம் தற்போதைய இலங்கை ஆட்சியாளருக்குச் சாதகமான முறையிலேயே அப்போது இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்தன. அப்படியும் அரசாங்கம் அதன் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை.

இப்போது ஒரு வருடம் கடந்துவிட்டது. அடுத்தவாரம் ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் ஆரம்பமாகின்றது. ஆனால் இந்த ஒரு வருடத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் எவை நிறைவேற்றப்பட்டன?

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சம்பந்தமான அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டு இப்போது ஒன்றரை வருடங்கள் சென்றுவிட்டது. இன்னும் அது செயற்படத் தொடங்கவில்லை. பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னும் கைவாங்கப்படவில்லை. அந்தக் கொடூரமான சட்டத்தின் கீழ் கைதான பலர் இன்னமும் தடுப்பில் உள்ளனர். பலர் சம்பந்தமாக வழக்குகள் பதியப்படவில்லை. சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. இனநெருக்கடிக்கான அரசியலமைப்பு மூலமான தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையும் தற்போது இல்லை என்றே கூறலாம். நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளையடுத்து கூட்டரசாங்கம் அதனை முன்னெடுப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு என்பதே யதார்த்தம்.

இந்த நிலையில் சர்வதேசம் என்ன செய்யப்போகின்றது? சர்வதேசத்தின் அழுத்தங்களால் மட்டுந்தான் இங்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், தமிழர்களுக்கு நீதியைக் பெற்றுக் கொடுக்க சர்வதேச சமூகம் இனியும் தாமதிக்கக்கூடாது. அமெரிக்காவில் இருந்து வந்த நிஷா பிஸ்வால் அவர்களிடம் ஐ.நா மீண்டும் இருவருடங்கள் தவணை கொடுப்பதைப் பற்றி எனது ஆட்சேபணைகளை சென்ற வருட ஆரம்பத்தில் தெரிவித்த போது தமிழர்களை ஒரு போதும் அமெரிக்கா கைவிடாது என்றார். இப்பொழுது அவரும் பதவி இழந்துவிட்டார்.

எமது பெரும்பான்மையின அரசாங்கம் நெருக்குதல் இல்லாவிட்டால் ஒரு போதும் எமது உரிமைகளைத் தரமுன்வராது என்பதே எனது கருத்து. நியாயமான முறையில் போர்க் குற்றங்களை விசாரிக்க அரசாங்கம் முன்வராது. எந்தளவுக்கு நெருக்குதல்களை பிற அரசாங்கங்கள் உண்டு பண்ணுவன என்பது நாம் அவர்களுடன் சேர்ந்து பேசி ஏற்படுத்த வேண்டியதொன்று. காலங் கடந்தால் “ஆறின கஞ்சி பழங்கஞ்சி” ஆகிவிடும்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை ஐ.நா பாதுகாப்புச்சபை ஆற்றுப்படுத்த வேண்டும் அல்லது குறித்த ஒரு பணிக்காக நியமிக்கப்படும் தீரப்பு மன்றம் ஒன்று இலங்கையில் நடந்த சர்வதேச மனித உரிமைகள் மீறல் பற்றி ஆராய நியமிக்கப்பட வேண்டும் என்று ஒரு கோரிக்கை எம்மிடையே எழுந்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தின் செயலாளர் நாயகத்தின் கருத்தின் அடிப்படையிலேயே அவ்வாறான ஒரு நடவடிக்கை எடுக்க முடியும் என்று கருதுகின்றேன்.

Read More